Posts

Showing posts from November, 2023
Image
‘வா வரலாம் வா’ திரைப்பட விமர்சனம்-  இப்படத்தின் கதை திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எல்.ஜி.ரவிசந்தர், தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும் மஹானா சஞ்சீவி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக மைம் கோபி நகைச்சுவைக்கு ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்க சிங்கம் புலி, இயக்குநர் சரவண சுப்பையா, கிரேன் மனோகர், தீபா சங்கர் உள்ளிட்ட  நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்திருப்பதோடு நாற்பது குழந்தை நட்சத்திரங்களும் பங்கேற்றிருப்பது குழந்தைகள் படம் எனலாம். சிறு வயதில் செய்த குற்றத்திற்காக சிறையில் பல வருடங்களை கழித்துவிட்டு விடுதலையாகும் நாயகன் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, உழைத்து வாழ நினைத்து வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்காததால், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட முடிவு செய்பவர்கள், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள். அதன்படி, மைம் கோபி பேச்சை கேட்டு வால்வோ பேருந்து ஒன்றை கடத்த தி
Image
எங்க வீட்ல பார்ட்டி முகநூலில் ஏற்படும் விபரீதங்களை விளக்கும் கதை இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை சொல்லும் கதை. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாக பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் ? கொலை செய்தது, கொலை செய்ய  காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் கதையே "எங்க வீட்ல பார்ட்டி. ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன்   சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார்  இணைந்து தயாரித்துள்ளனர். அகிலா முதலாம் வகுப்பு, கணீனியும் கழனியும், ஆகிய படங்களை இயக்கிய கே.சுரேஷ் கண்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். venkat துப்பறியும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் நடிக்க யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -ஆர்.பாலா இசை-வி.கோபி ஸ்ரீ பின்னணி இசை - சுரேஷ் சர்மா பாடல்கள்- சுரேஷ் நாராயணன் தளபதி ராம்குமார் ந
Image
’சைத்ரா’ - விமர்சனம் நாயகி யாஷிகா மற்றும் அவரது கணவர் அவி தேஜ், இருவரும் திருமணம்  செய்து கொண்டு ஒரு பங்களா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்பு  விபத்தில் இறந்து  போன யாஷிகாவின் தோழி,   கணவனுடன் வந்து மிரட்டுவதாக தன் கணவனிடம் சொல்லி விட்டு ,தற்கொலைக்கு முயல்கிறாள்  யாஷிகா ஆனந்த் இதை பார்த்த அவி தேஜ் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று கூறி தன் நண்பரிடம் பேய்யை விரட்ட சாமியாரை வரச் சொல்கிறார். அப்போது  நாயகன் அவி தேஜ், நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க அவி தேஜ், அழைக்கிறார். மீண்டும் வீட்டுக்கு வரும்  நாயகன் அவி தேஜ்  அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள்  நடப்பதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இறுதியில் நாயகி யாசஷிகா ஆனந்த்  அந்த வீட்டில் இருந்து   உயிருடன் வெளியே வந்தாரா/ இல்லையா? எனபதே   ’சைத்ரா’   படத்தின் கதை. நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் அந்த  கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் அவிதேஜ், அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்
Image
செவ்வாய்கிழமை’  - விமர்சனம் 1986 ஆண்டு மகாலக்‌ஷ்மிபுரம் கிராமத்தில் வசிக்கும்  ரவி & சைலஜா இருவரும் சிறுவயது நண்பர்களாக இருக்கின்றனர்.  சைலஜாவின் அப்பா இரண்டாவது திருமணம் கொள்கிறார்.  சைலஜா அவரது  பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள்  தனக்கு ஆறுதலாக இருந்த ரவியும்,அவரின் அப்பாவும் ஒரு தீ விபத்தில் இறந்து விடுகிறார்கள். 10  வருடங்களுக்கு பிறகு சைலஜா இருக்கிற கிராமத்தில் மர்மமான முறையில் மக்கள் இறக்கிறார்கள். அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்களை பற்றிய சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இன்றி இந்த மர்ம மரணங்கள் சரியாக செவ்வாய்கிழமையில் மட்டுமே நடக்கிறது. இந்த மரணத்தின் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக வரும்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா விசாரணை மேற்கொள்கிறார். இறுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா  சைலஜாவுக்கும் தொடர் கொலைக்கும்  உள்ள தொடர்பு என்ன ? கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ‘செவ்வாய்கிழமை’  படகதை.. ஷைலு என்ற கதாபாத்திரத்தில் பயல் ராஜ்புத் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார்.  அரை நிர்வானமாக வந்து செல்லும் நாயகி. வினோத நோயால்பாதிக்கப்பட்டவ
Image
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  - விமர்சனம் மதுரையில்  மிகப் பெரிய ரௌடியாக இருப்பவர்  ராகவா லாரன்ஸ். எப்படியாவது  கதாநாயகனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இவருக்கு ஏற்கனவே  கதாநாயகனாக இருக்கும்  ஒருவர் கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் முடிவு எடுக்கிறார். இதற்காக இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார். மறுபக்கம் சென்னையில் போலீஸ் எஸ்.ஐ-க்கு தேர்வாகி கொலை பலியால் ஜெயிலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் ரௌடி ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரியான நவீன் சந்திரா கூறுகிறார்.எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார். அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர் தேடுவதை அறிந்து, உன்னை வைத்து நான் படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடனே நெருங்கி பழகுகிறார்.. ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா ரௌடி ராகவா லாரன்ஸ் கொலை செய்ய திட்டம் போடுகிறார் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா ராகவா லாரன்ஸை கொலை செய்தாரா? இல்லையா?  ராகவா லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா படம் எடுத்தாரா? இல்லையா?  என்பதே  ஜிகர்தண்டா டபுள் எக
Image
ஜப்பான்’ -  விமர்சனம் கோவையில் பிரபலமான நகைக்கடை ஒன்றில் சுமார் 200 கோடி மதிக்கத்தக்க நகைகள் திருடு போகின்றன. இந்த நகைகளை கொள்ளையடித்தது, பிரபல திருடனான ஜப்பான் (கார்த்தி) தான் என்று கண்டு பிடிக்கின்றனர். அதற்கான தடயங்கள் இருப்பதாக கூறி, ஜப்பானை தேடுகின்றனர். அமைச்சருக்கு சொந்தமான நகைக்கடை என்பதால் சுனில் தலைமையிலான ஒரு காவல்துறையும் , விஜய் மில்டன் தலைமையிலான ஒரு காவல்துறையும்  கார்த்தியை தேடி வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் கார்த்தி  தான் அந்த நகைகளை கொள்ளையடிக்கவில்லை என்று கூறுகிறார். இறுதியில் அந்த நகைகளை கொள்ளையடித்தது யார்? கொள்ளையடித்தற்கான காரணம் என்ன ? என்பதே ’ஜப்பான்’  படத்தின்கதை.. ஜப்பான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  கார்த்திக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான  தேர்வாக இருக்கிறார். கார்த்தி   தோற்றம், நடை , பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.  கார்த்தியின் 25வது படமாக வந்திருக்கிறது. கார்த்தி. கதை தேர்வில் கூடுதல் கவனம் தேவை
Image
ஜப்பான்’ -  விமர்சனம் கோவையில் பிரபலமான நகைக்கடை ஒன்றில் சுமார் 200 கோடி மதிக்கத்தக்க நகைகள் திருடு போகின்றன. இந்த நகைகளை கொள்ளையடித்தது, பிரபல திருடனான ஜப்பான் (கார்த்தி) தான் என்று கண்டு பிடிக்கின்றனர். அதற்கான தடயங்கள் இருப்பதாக கூறி, ஜப்பானை தேடுகின்றனர். அமைச்சருக்கு சொந்தமான நகைக்கடை என்பதால் சுனில் தலைமையிலான ஒரு காவல்துறையும் , விஜய் மில்டன் தலைமையிலான ஒரு காவல்துறையும்  கார்த்தியை தேடி வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் கார்த்தி  தான் அந்த நகைகளை கொள்ளையடிக்கவில்லை என்று கூறுகிறார். இறுதியில் அந்த நகைகளை கொள்ளையடித்தது யார்? கொள்ளையடித்தற்கான காரணம் என்ன ? என்பதே ’ஜப்பான்’  படத்தின் கதை.. ஜப்பான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  கார்த்திக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான  தேர்வாக இருக்கிறார். கார்த்தி   தோற்றம், நடை , பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.  கார்த்தியின் 25வது படமாக வந்திருக்கிறது. கார்த்தி  கதை தேர்வில் கூடுதல
Image
ரெய்டு - விமர்சனம் போலீஸ் அதிகாரியாக் இருக்கும் விக்ரம் பிரபு  ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழித்து தூய்மையான  நகரமாக மாற்ற நினைக்கிறார்.  நகரில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகிய  ரிஷி மற்றும் சவுந்தரராஜானுடன் விக்ரம் பிரபுவிற்கு இடையே மோதல் ஏற்படுகிறது. ஒ ரு கட்டத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக  விக்ரம் பிரபுவிற்கு புகார்  வருகிறது . இந்த வழக்கை விசாரிக்கும் விக்ரம் பிரபுவிற்கு அந்த பெண்  கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது . இந்த கொலைக்கு  ரிஷியின் தம்பி  டேனியல் தான் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார். இதனையடுத்து  டேனியலை விக்ரம் பிரபு என்கவுண்டரில் சுட்டு  தள்ளுகிறார். இதனையடுத்து கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தரராஜன், விக்ரம் பிரபுவையும்  அவரது காதலி ஶ்ரீ திவ்யாவையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி செல்கின்றனர்  இதில் ஶ்ரீ திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரை விடுகிறார் .இச்சம்பவத்தில் இருந்து உயிர் பிழைக்கும்  விக்ரம் பிரபு  இறுதியில் ஶ்ரீ திவ்யாவை கொன்றவர்களை பழிவாங்கினாரா ? இல்லையா? என்பதே  ’ரெ
Image
*சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு.* சென்னை ரைபிள் கிளப் - 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை  உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌ எழும்பூர் மற்றும் அலமாதியில் இரண்டு துப்பாக்கி சுடும் வளாகங்களை கொண்டிருக்கிறது.   தமிழகத்தில் துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக மறைந்த டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சுடும் வளாகங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. மதிப்புமிக்க அர்ஜுனா விருதை வென்ற திருமதி. ரூப ஸ்ரீநாத் உன்னிகிருஷ்ணன் மற்றும் சமீபத்தில் ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிருத்விராஜ் தொண்டைமான் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளளனர்‌. இந்நிலையில் சென்னை ரைபிள் கிளப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள Police Officers Mess வளாகத்தில் நடைபெற்றது. நவம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சங்க த
Image
*பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான  தி வில்லேஜ் திரைப்படம்  நவம்பர் 24 அன்று வெளியிடப்படுவதை அறிவித்தது ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில்பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில்  தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறது* இந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச்சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட  பல்வேறு நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ளார்.  மும்பை, இந்தியா—நவம்பர் 09, 2023—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட அதன் தமிழ் திகில், ஒரிஜினல் தொடரான தி வில்லேஜ் திரைப்படத்தின் பிரீமியர் வெளியீட்டுத்  தேதியை இன்று அறிவித்தது. மிலிந்த் ராவ் (Milind Rau) இயக்கத்தில் உருவான , தி வில்லேஜ், தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி ம
Image
இருபது நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த  " வாங்கண்ணா வணக்கங்கண்ணா " திரைப்பட டீம்   Rock & Role production &  A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ  இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார் . பிரபு ,சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ்,  ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு – பா .சிவக்குமார். இந்தப் படம் ஒரே நாளில்  நடக்க
Image
ரூல் நம்பர் 4’  - விமர்சனம் தனியார் வங்கி ஒன்றில் ஏடிஎம் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார் நாயகன்  பிரதீஸ் குலதெய்வ  கோவில் வழிபாட்டிற்க ஊருக்கு செல்லும் நாயகன்  அங்கு நாயகி ஸ்ரீகோபிகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார்.. சில நாட்கள் கடந்த நிலையில்  செல்லும் வழியில் நாயகியை பார்த்தும் தன் சொல்கிறார்  முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி பிறகு காதலை ஏற்கிறார். ஒரு கட்டத்தில் தான் காதலிப்பது ஏடிஎம் செக்யூரிட்டி  மோகன் வைத்யாவின் மக்ள் என தெரிய வருகிறது. ஏடிஎம்  பணம்  எடுத்து செல்லும் மேல் அதிகாரியான  ஜீவா ரவியிடம் தன் காதலை சேர்த்து வைக்க உதவி கேட்கிறான் நாயகன் பிரதீஸ்   இந்நிலையில் நாயகன் மற்றும்  குழுவினர் ஒரு அவசர தேவைக்காக  5 கோடி ரூபாய் பணத்தை எடுத்து செல்ல  4 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் வேனை கடத்துகிறது . இதே நேரத்தில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் பிர்லா போஸ் அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார். இறுதியில் நாயகன்  ஏகே பிரதீஸ் கிருஷ்ணா  கொள்ளர்களிடமிருந்தது  5 கோடி ரூபாய்  பணத்தை மீட்டாரா? இல்லையா?  என்பதே ’ரூல் நம்பர் 4’  என்பதே படத்தின் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்க
Image
’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம் தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம். என்ன கதை? தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது. தனது தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அவர்களை விரட்டியடிப்பார். அப்படிப்பட்டவரின் மகனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கு ஸ்ரீனி செளந்தரராஜன் மறுப்பு தெரிவிப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டை தவிர மற்ற விளையாட்டில் ஈடுபடுமாறு சொல்கிறார். கிரிக்கெட் விளையாட்டை ஸ்ரீனி செளந்தரராஜன் வெறுப்பதற்கு காரணம் என்ன? என்பதை கண்டறியும் அவரது மனைவி, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அதன் பிறகே அவர் தனது மகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறார். இதற்கிடையே. தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த