ரூல் நம்பர் 4’  - விமர்சனம்
தனியார் வங்கி ஒன்றில் ஏடிஎம் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார் நாயகன்  பிரதீஸ் குலதெய்வ  கோவில் வழிபாட்டிற்க ஊருக்கு செல்லும் நாயகன்  அங்கு நாயகி ஸ்ரீகோபிகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார்.. சில நாட்கள் கடந்த நிலையில்  செல்லும் வழியில் நாயகியை பார்த்தும் தன் சொல்கிறார்  முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி பிறகு காதலை ஏற்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் காதலிப்பது ஏடிஎம் செக்யூரிட்டி  மோகன் வைத்யாவின் மக்ள் என தெரிய வருகிறது. ஏடிஎம்  பணம்  எடுத்து செல்லும் மேல் அதிகாரியான  ஜீவா ரவியிடம் தன் காதலை சேர்த்து வைக்க உதவி கேட்கிறான் நாயகன் பிரதீஸ்  

இந்நிலையில் நாயகன் மற்றும்  குழுவினர் ஒரு அவசர தேவைக்காக  5 கோடி ரூபாய் பணத்தை எடுத்து செல்ல  4 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் வேனை கடத்துகிறது . இதே நேரத்தில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் பிர்லா போஸ் அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார். இறுதியில் நாயகன்  ஏகே பிரதீஸ் கிருஷ்ணா  கொள்ளர்களிடமிருந்தது  5 கோடி ரூபாய்  பணத்தை மீட்டாரா? இல்லையா?  என்பதே ’ரூல் நம்பர் 4’  என்பதே படத்தின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா இயல்பான நடித்திருக்கிறார்.  காதல், ஆக்ஷன், சென்டிமென்ட என அனைத்தையும் சிறப்பாக் செய்திருக்கிறார்.  நாயகியாக வரும் ஸ்ரீகோபிகா அழகாக வந்து அளவான  நடிப்பை கொடுத்திருக்கிறார். இறுதி  காட்சில் இவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.
 
செக்யூரிட்டியாக  நடித்திருக்கும் மோகன் வைத்யா, மேல் அதிகாரியாக வரும்  ஜீவா ரவி கர்ப்பிணி பெண்ணாக வருபவர். ,வனத்துறை அதிகாரியாக வரும் பிர்லா போஸ்  என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை  குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கெவின் டெகாஸ்டா இசையில் வரும் 5 பாடல்களும்  கேட்கும் விதத்தில் உள்ளது.   தீரஜ் சுகுமாறன் பின்னணி  இசை கதை நகர்விற்கு துணை நிற்கிறது.  டேவிட் ஜான் ஒளிப்பதிவில் அடர்ந்த காடுகளையும் மலைகளையும் நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்.

பணம் எடுத்து  செல்லும் வாகனத்தை கொள்ளையடிக்கும்  படங்கள் நிறைய பார்த்திருப்போம்   ஆனால் இந்த படம்  முறிரிலும் மாறுபட்ட திரைப்டமாக இருக்கிறது.   கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட்  என அனைத்தையும் சரி சமமாக கொடுத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பாஸர் படத்தின் முதல் பாதி  விறுவிறுப்பாகவும்   இரண்டாம் பாதி  யாரும் யூகிக்க முடியாத கதையாக உள்ளது.

நடிகர்கள்  ; ஏகே பிரதீஸ் கிருஷ்ணா,  ஸ்ரீகோபிகா ,மோகன் வைத்யா,  ஜீவா ரவி, கலா கல்யாணி,பிர்லா போஸ்

இசை ;  கெவின் டெகாஸ்டா

இயக்கம் ; பாஸர்

மக்கள் தொடர்பு ; பா.சிவக்குமார்

Comments

Popular posts from this blog