ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  - விமர்சனம்
மதுரையில்  மிகப் பெரிய ரௌடியாக இருப்பவர்  ராகவா லாரன்ஸ். எப்படியாவது  கதாநாயகனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இவருக்கு ஏற்கனவே  கதாநாயகனாக இருக்கும்  ஒருவர் கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் முடிவு எடுக்கிறார். இதற்காக இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார்.
மறுபக்கம் சென்னையில் போலீஸ் எஸ்.ஐ-க்கு தேர்வாகி கொலை பலியால் ஜெயிலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் ரௌடி ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரியான நவீன் சந்திரா கூறுகிறார்.எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார். அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர் தேடுவதை அறிந்து, உன்னை வைத்து நான் படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடனே நெருங்கி பழகுகிறார்..
ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா ரௌடி ராகவா லாரன்ஸ் கொலை செய்ய திட்டம் போடுகிறார் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா ராகவா லாரன்ஸை கொலை செய்தாரா? இல்லையா?  ராகவா லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா படம் எடுத்தாரா? இல்லையா?  என்பதே  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மீதிக்கதை.

ரவுடியாக நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  தன்னை மாற்றிக் கொண்டு  நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவரது தோற்றம், நடை, உடை, உடல் மொழி அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. ராகவா லாரன்சின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷாசஜயனுக்குப் பழங்குடிப்பெண் வேடம் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா  இயல்பான நடிப்பின் மூலம் அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகர்  செய்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்த்திருக்காது. தொடை நடுங்கியாகவும் படம் எடுக்கும் இயக்குனராகவும் கவனிக்க வைத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்சை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். காவலதிகாரியாக வரும் நவீன்சந்திரா மற்றும் இளவரசு, சத்யன் ஆகியோர் கதாபாத்திரங்கள் சரியான தேர்வாகி இருக்கிறது.
சந்தோஷ்நாராயணனின் இசையில் மாமதுரை அன்னக்கொடி பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, காலகட்டத்திற்கு ஏற்றதாக் உள்ளது.
 ஒரு ரவுடி -போலீஸ் கதைதான். என்றாலும் ஆனால் சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்குகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  முதல் பாதி மதுரையை சுற்றி நடக்கும் கதை, இரண்டாவது பாதி தேனி மலைபகுதியில் நடக்கிறது   நாள் படத்தை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்

நடிகர்கள் :ராகவாலாரன்ஸ்,எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா

இசை : சந்தோஷ் நாராயணன்

இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

மக்கள்  தொடர்பு : நிகில் முருகன்


 

Comments

Popular posts from this blog