செவ்வாய்கிழமை’  - விமர்சனம்
1986 ஆண்டு மகாலக்‌ஷ்மிபுரம் கிராமத்தில் வசிக்கும்  ரவி & சைலஜா இருவரும் சிறுவயது நண்பர்களாக இருக்கின்றனர்.  சைலஜாவின் அப்பா இரண்டாவது திருமணம் கொள்கிறார்.  சைலஜா அவரது  பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள்  தனக்கு ஆறுதலாக இருந்த ரவியும்,அவரின் அப்பாவும் ஒரு தீ விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

10  வருடங்களுக்கு பிறகு சைலஜா இருக்கிற கிராமத்தில் மர்மமான முறையில் மக்கள் இறக்கிறார்கள். அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்களை பற்றிய சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இன்றி இந்த மர்ம மரணங்கள் சரியாக செவ்வாய்கிழமையில் மட்டுமே நடக்கிறது.

இந்த மரணத்தின் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக வரும்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா விசாரணை மேற்கொள்கிறார். இறுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா  சைலஜாவுக்கும் தொடர் கொலைக்கும்  உள்ள தொடர்பு என்ன ? கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ‘செவ்வாய்கிழமை’  படகதை..

ஷைலு என்ற கதாபாத்திரத்தில் பயல் ராஜ்புத் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார்.  அரை நிர்வானமாக வந்து செல்லும் நாயகி. வினோத நோயால்பாதிக்கப்பட்டவராகவும்  அதீத காமம் கொள்ளும்  காட்சிகளும்  மற்றவர்களால் அவமானம்படும்  இடத்திலும்  அழகான  நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் இடத்தை பிடிக்கிறார். .ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி செல்லும்  பயல் ராஜ்புத் கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும்  ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்‌ஷ்மன் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு  இனிமை  பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு  உயிர்  கொடுக்கும் விதத்தில் உள்ளது.   ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகளை அழகாகவும், ஆக்ரோஷமாகவும் படத்தின் கதை நகர்விற்கு துணை நிற்கிறார்.

படத்தின் ஆரம்பம்  முதல் இறுதி வரை யார் கொலைகாரன் என்பதை யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.  இயக்குநர் அஜய் பூபதி  முதல் பாதியில் திகில் காட்சிகளை வைத்து   இரண்டாம் பாதியில் வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் வித்தியாசமான முறையில் கதையை நகர்த்தி இறுதி காட்சியில்  யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதையை  நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


நடிகர்கள்   ::  பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லட்சுமண்

இசை : பி.அஜனீஷ்

இயக்கம் : அஜய் பூபதி

மக்கள் தொடர்பு:  சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர்   ( ?Done )

Comments

Popular posts from this blog