ரெய்டு - விமர்சனம்
போலீஸ் அதிகாரியாக் இருக்கும் விக்ரம் பிரபு  ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழித்து தூய்மையான  நகரமாக மாற்ற நினைக்கிறார்.  நகரில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகிய  ரிஷி மற்றும் சவுந்தரராஜானுடன் விக்ரம் பிரபுவிற்கு இடையே மோதல் ஏற்படுகிறது.

ரு கட்டத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக  விக்ரம் பிரபுவிற்கு புகார்  வருகிறது . இந்த வழக்கை விசாரிக்கும் விக்ரம் பிரபுவிற்கு அந்த பெண்  கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது . இந்த கொலைக்கு  ரிஷியின் தம்பி  டேனியல் தான் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார். இதனையடுத்து  டேனியலை விக்ரம் பிரபு என்கவுண்டரில் சுட்டு  தள்ளுகிறார்.
இதனையடுத்து கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தரராஜன், விக்ரம் பிரபுவையும்  அவரது காதலி ஶ்ரீ திவ்யாவையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி செல்கின்றனர்  இதில் ஶ்ரீ திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரை விடுகிறார் .இச்சம்பவத்தில் இருந்து உயிர் பிழைக்கும்  விக்ரம் பிரபு  இறுதியில் ஶ்ரீ திவ்யாவை கொன்றவர்களை பழிவாங்கினாரா ? இல்லையா? என்பதே  ’ரெய்டு’ படத்தின் கதை.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு கம்பீரமாக வலம் வருகிறார். காதல்,ஆக்ஷன், எமோஷனல் என அனைத்தையும் சரியாக கொடுத்திருக்கிறார்.  படத்தில்  ரவுடிகளை ஒழிக்க துப்பாக்கியை  பயன்படுத்தியதை காட்டிலும்  அருவாளை தான்  அதிகாமாக பயன்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா, நீண்ட நாட்களுக்குப்  பிறகு  ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டாம் பாதியில் தான் வருகிறார். குறைவான  காட்சிகள் இருந்த போதிலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். ஶ்ரீ திவ்யாவின் தங்கையாக வரும்  அனந்திகா நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

ரவுடியாக வரும் சௌந்தர்ராஜன்  கண்களாலே மிரட்டுகிறார். காதலியின் கண் முன்னே அவமானம் படும் காட்சிகளில்  கவனம் பெறுகிறார். ரிஷி, வேலு பிரபாகரன் ,செல்வா ,ஜார்ஜ் ,டேனியல் அன்னி போப் ,ஹரிஷ் பேராடி, சாமிநாதன் என் படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் .

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம்,   பின்னணி  இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. கதிரவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது.

கன்னடத்தில் சிவராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன டகரு படத்தின் ரீமேக் இது இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்  முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணி யாற்றிய கார்த்தி இப்படத்தை  ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள்  : விக்ரம்.பிரபு, ஶ்ரீ திவ்யா,  அனந்திகா, ஹரிஷ் பெராடி, சவுந்தர் ராஜன், செல்வா, ரிஷி, வேலு பிரபாகரன்

இசை : சாம்.சி.எஸ்

இயக்கம் : கார்த்தி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & ரேகா, நாசர் ( D  one )


 

Comments

Popular posts from this blog