’சைத்ரா’ - விமர்சனம்

நாயகி யாஷிகா மற்றும் அவரது கணவர் அவி தேஜ், இருவரும் திருமணம்  செய்து கொண்டு ஒரு பங்களா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்பு  விபத்தில் இறந்து  போன யாஷிகாவின் தோழி,   கணவனுடன் வந்து மிரட்டுவதாக தன் கணவனிடம் சொல்லி விட்டு ,தற்கொலைக்கு முயல்கிறாள்  யாஷிகா ஆனந்த் இதை பார்த்த அவி தேஜ் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று கூறி தன் நண்பரிடம் பேய்யை விரட்ட சாமியாரை வரச் சொல்கிறார்.

அப்போது  நாயகன் அவி தேஜ், நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க அவி தேஜ், அழைக்கிறார். மீண்டும் வீட்டுக்கு வரும்  நாயகன் அவி தேஜ்  அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள்  நடப்பதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இறுதியில் நாயகி யாசஷிகா ஆனந்த்  அந்த வீட்டில் இருந்து   உயிருடன் வெளியே வந்தாரா/ இல்லையா? எனபதே   ’சைத்ரா’   படத்தின் கதை.
நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் அந்த  கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் அவிதேஜ், அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் .

,பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் படங்களுக்கு ஏற்றபடி  உள்ளது.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப இருந்து பயப்பட வைக்கிறது.
பேய்  குறித்து எவ்வளவோ படங்கள் வெளி வந்த நிலையில் வித்யாசமான பேய் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார்.  இயக்குனர் எம்.ஜெனித்குமார் திரைக்கதையில் கவனம்  செலுத்தி இருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்.

நடிகர்கள் :  யாஷிகா ஆனந்த், அவி தேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், மொசக்குட்டி

இசை : ,பிரபாகரன் மெய்யப்பன்

இயக்கம் :   எம்.ஜெனித்குமார்

மக்கள் தொடர்பு : மணவை புவன்

Comments

Popular posts from this blog