ஜப்பான்’ -  விமர்சனம்
கோவையில் பிரபலமான நகைக்கடை ஒன்றில் சுமார் 200 கோடி மதிக்கத்தக்க நகைகள் திருடு போகின்றன. இந்த நகைகளை கொள்ளையடித்தது, பிரபல திருடனான ஜப்பான் (கார்த்தி) தான் என்று கண்டு பிடிக்கின்றனர். அதற்கான தடயங்கள் இருப்பதாக கூறி, ஜப்பானை தேடுகின்றனர்.
அமைச்சருக்கு சொந்தமான நகைக்கடை என்பதால் சுனில் தலைமையிலான ஒரு காவல்துறையும் , விஜய் மில்டன் தலைமையிலான ஒரு காவல்துறையும்  கார்த்தியை தேடி வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் கார்த்தி  தான் அந்த நகைகளை கொள்ளையடிக்கவில்லை என்று கூறுகிறார். இறுதியில் அந்த நகைகளை கொள்ளையடித்தது யார்? கொள்ளையடித்தற்கான காரணம் என்ன ? என்பதே ’ஜப்பான்’  படத்தின் கதை..
ஜப்பான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  கார்த்திக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான  தேர்வாக இருக்கிறார். கார்த்தி   தோற்றம், நடை , பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.  கார்த்தியின் 25வது படமாக வந்திருக்கிறது. கார்த்தி  கதை தேர்வில் கூடுதல் கவனம் தேவை
நாயகியாக நடித்திருக்கிறார் அனு இம்மானுவேல் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஜித்தன் ரமேஷ், வாகை சந்திரசேகர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் மில்டன் மற்றும் சுனில் ஆகியோர் நடிப்பு  கதை நகர்விற்கு துணை நிற்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு  ஏற்றவாறு பயணித்திருக்கிறது.  ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தை  உருவாக்கி இருக்கும் இயக்குனர் ராஜு முருகன்  திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்.   படத்தில் இறுதி காட்சி மட்டும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.

நடிகர்கள் : கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர்

இசை :  ஜி.வி.பிரகாஷ்

இயக்கம் : ராஜு முருகன்  

மக்கள் தொடர்பு : ஜான்சன்






 

Comments

Popular posts from this blog