Posts

Showing posts from September, 2023
Image
’வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’  -  வி மர்சனம் தரங்கம்பாடியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வாழும் பெண் நிரஞ்சனாவுக்கும்  அர்ஷத்திக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்கிறார்கள்.  அர்ஷத்  தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்திற்கு முந்தையை நாள் நிரஞ்சனா அர்ஷத்தை தனியாக அழைத்து பேசுகிறார், நிரஞ்சனா  தான் ஸ்ருதி என்கிற பெண்ணை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். இறுதியில்   நிரஞ்சனா  - அர்ஷத் திருமண நடத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. தன் பாலின ஈர்ப்பாளர்களாக வரும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்கள். நாயகனாக வரும் அர்ஷத்  எதார்த்தமாக நடித்திருக்கிறார்.  நிரஞ்சனா அப்பாவாக நடித்தவர்  என உட்பட படத்தில் நடித்த  அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.  கதைக்கு ஓட்டத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவு அமைந்திருக்க
Image
ஆர் யூ ஓகே பேபி’  - விமர்சனம் திருமணம் செய்து கொள்ளாமல்  லிவிங் டூ கெதர் முறையில் வாழும் முல்லையரசி - அசோக் ஜோடிக்கு பெண் குழந்தை பிறக்கிறது.  வறுமை காரணமாக  குழந்தையை சமுத்திரக்கனி - அபிராமி தம்பதிகளுக்கு பணம் வாங்கி கொண்டு கைக் குழந்தை கொடுக்கிறார்கள். நீண்ட காலமாக குழந்தை இல்லாத  சமுத்திரக்கனி - அபிராமி தம்பதிகளுக்கு குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இவர்களுடைய  வாழ்க்கை  செல்கிறது. இந்நிலையில்  ஒரு வருடத்திற்கு பிறகு  முல்லையரசி தனது குழந்தையை திரும்ப தரும்படி  கேட்கிறார் சமுத்திரக்கனி குழந்தையை தரமறுக்கிறார். அதற்காக அவர் பல முயற்சிகள் செய்து  குழந்தையை திரும்ப பெற முடியாமல் இருக்க மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை அனுகுகிறார். தாய் முல்லையரசி பணத்தை வாங்கி  கொண்டு  குழத்தையை  கொடுத்தார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளும்  லட்சு மி ராமகிருஷ்ணன் இந்த விவாகத்திற்கு நீதிமன்றத்தின் மூலம்  தீர்வு காண  சொல்கிறார். இறுதியில் நீதிமன்றத்தின்  தீர்ப்பு என்ன? என்பதே படத்தின் கதை. குழந்தை இல்ல
Image
ஆதி photos நிறுவனம் சார்பில் A.D.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் விருது. இந்தப் படம் வெளிவந்து தியேட்டர்களில் 40 நாள் வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது இப்போது உலகநாதன் என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார்கள் .கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த ஃபேமிலி  படமாக உருவாக்கியிருக்கிறார்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது. விருது படத்தை இயக்கிய A. ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அ ட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் ந டித்திருக்கிறார்., ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் அவரே டூப் இல்லாமல் நடித்து படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வ ந்தவர்கள் அத
Image
கபில் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது  கவிஞர் சினேகன் நடிகர் மைம் கோபி வெளியிட்டனர் தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான்,சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,  பேபி ஷர்ஷா மற்றும் பலரும் உண்டு.  கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை.  ஒளிப்பதிவு-ஷியாம் ராஜ் பாடல்கள் -  கவிஞர் சினேகன், கவிஞர் பா.விஜய் கவிஞர் அருண்பாரதி இசை -  ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் நிர்வாகத் தயாரிப்பு- ஏ.ஆர்.சூரியன் கதை திரைக்கதை வசனம் இயக்கம்- பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் - வெங்கட் பி.ஆர்.ஓ
Image
*மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் திரைப்படமான  டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அற்புதமான 2வது சிங்கிள் "வீடு" பாடல்  செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது* பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல்  சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, ​​​​டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு  பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில்  கண்களில் பொறி பறக்க  உக்கிரமாக நடப்பதைக் காணலாம். அவர் பீடி புகைக்கும்போது, ​​அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் பைத்தியம் பிடித்து, காட்டு நடனம் ஆடுகிறார்கள். இந்த போஸ்டர் டைகர் நாகேஸ்வர ராவ் மீதான ஆவலை தூண்டுகிறது.  மேலும் செப்டம்பர் 21 அன்று நாம் எந்த மாதிரியான ஆல்பத்தை கேட்கவிருக்கிறோம்
Image
கெழப்பய’  -  விமர்சனம் 65 வயதுடைய கதையின் நாயகன் கதிரேசகுமார் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். பணிமுடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது அது கிராமபுற சாலை என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். அந்த காரில் கர்ப்பிணி பெண் ஒருவரோடு சேர்த்து 5 பேர் அந்த காரில் வருகிறார்கள். கார் ஓட்டுனர்  வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார்  ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள். அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து  மகனுக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. மகன் வந்து கூப்பிட்டும் வர மறுக்கிறார் கதிரேசகுமார் இறுதியில் கதிரேசகுமார் காரை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் என்ன?  என்பதே ’கெழப்பய’  படத்தின் கதை. கதையின் நாயகனா
Image
*வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி* 'விடுதலை - பாகம்  2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில்  கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி  ஆகிய பட நிறுவனங்கள்
Image
இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட FIRST LOOK POSTER  "வா வரலாம் வா" பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்-ரெடின் கிங்ஸ்லீ நடிப்பில் உருவான "வா வரலாம் வா" ---------------------------------- பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளி குழந்தைகளை கடத்தும் நாயகனும் அவனது நண்பனும், அதில் வெற்றி பெற்று பணக்காரர்களாக உயர்ந்தார்களா? இல்லையா? என்பதை முழு நகைச்சுவையுடன் கூறுவதே "வா வரலாம் வா"  பாலாஜி முருகதாஸ் - மஹானா சஞசீவி கதாநாயகன் - நாயகியாக நடிக்க, காயத்திரி ரெமா மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளனர். முதன்மை காமெடியனாக ரெடின் கிங்ஸ்லீ நடிக்க, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர்.  இவர்களுடன், சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா சங்கர் வையாபுரி,  பயில்வான் ரங்கநாதன்,பிரபாகரன் எனப்பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இசை - தேவா ஒளிப்பதிவு- கார்த்திக் ராஜா,  படத்தொகுப்பு - ராஜாமுகம்மது பாடல்கள்-காதல் மதி, "கானா" எட்வின் நடனம் - நோபல் சண்டைப்பயிற்சி- இடிமின்னல் இளங்கோ தயாரிப்பு மேற்பார்வை- ஆம்பூர் ஜெ. நேதாஜி
Image
‘ஸ்ட்ரைக்கர்’ - விமர்சனம் நாயகன் ஜஸ்டின் விஜய் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரில் வந்தவர்  இறந்து விடுகிறார். இதே  சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.  அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட நாயகன்  ஜஸ்டின் விஜய்அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார்.   ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க யூடியூபரான கதாநாயகி வித்யா பிரதீப் வருகிறார்.  ஓஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் என்ற ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள் ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும் போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து கொண்டு கொலை செய்து விடுவதாக  மிரட்டுகிறது.  இறுதியில் அவியிடம் இருந்து ஸ்டின் விஜய்- வித்யா பிரதீப்  உயிர் பிழைத்தார்களா? இல்லையா? என்பதே ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தின் கதை. நாயகனாக வரும்  ஜஸ்டின் விஜய் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.  .நாயகி  வித்யா பிரதீப் கதைக்கு தேவையான
Image
*"தி ரோட்" திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது* *பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது* AAA சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் திரு அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்பட வெளியீடு தேதி அட்டகாசமான பின்னணி இசையோடு டீஸர் வடிவில் அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது . இத்திரைப்படம் திரிஷாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.  மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அக்டோபர் 19-ல் லியோ வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே தி ரோட் படம் வெளியாவதால் திரிஷா ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளார்கள். மேலும் திரிஷாவிற்க்கு  "சவுத் குயின்" என்கிற பட்டத்தை முதல் முறையாக தி ரோட் திரைப்பட குழுவினர் திரிஷா பெயருடன் இணைத்து வெளிட்டதில் திரிஷா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியோடு கொண்
Image
’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ -  விமர்சனம் லண்டனில் நாசர் நடத்தி வரும் ஸ்டார் ஓட்டலில் பிரபல ஷெப்பாக பணியாற்றுகிறார். அனுஷ்கா   அப்பா - அம்மா பிரிவால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அனுஷ்கா தன் தாயுடன் சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அம்மா  ஜெயசுதா இறந்து விடுகிறார். அம்மாவின்   மறைவிற்கு  பிறகு தனது அம்மாவுக்கு தான் எப்படி துணையாக இருந்தேனோ அதுபோல் தனக்கும் ஒரு குழந்தை துணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படி, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் அனுஷ்கா, செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகுகிறார். எதிர்பாரதாவிதமாக நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்க நேருகிறது. ஸ்டண்டப் காமெடி மீது ஆர்வமுள்ள நவீன் பொலிஷெட்டியின் அனுகுமுறை அனுஷ்காவுக்கு பிடித்து போக, அவர் தான் தனது குழந்தைக்கு சரியான நபராக இருப்பார், என்று முடிவு செய்கிறார். இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா?
Image
ஜவான்’ - விமர்சனம் ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (மாறுவேடத்தில் 5 பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய கடனை அடைகிறார். இதனையடுத்து  சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீரமைக்கிறார். சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் நயன்தாரா ஷாருக்கானை  முயற்சி செய்கிறார். இந்நிலையில் நயன்தாராவை ஏமாற்றி ஷாருக்கான் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கும்பல் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரையும் கடத்துகிறது.  இறுதியில் ஷாருக்கான் - நயன்தாரா வில்லன் விஜய் சேதுபதியிடம் இருந்து உயிர் தப்பித்தார்களா? இல்லையா?   நாயகன் ஷாருக்கான்   விஜய் சேதுபதியை பழிவாங்குவதற்கான காரணம் என்ன?  எனபதே ’ஜவான்’ படத்தின் மகதை. இராணுவ வீரராக விக்ரம் ரத்தோர் என்ற வேடத்தில் அப்பாவாகவும் , ஜெயிலர் கதாபாத்திரத்தில் அசாத் என்ற வேடத்தில் மகனாகவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் இரண்டு வேடங்களுக்கும் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பி
Image
*எஸ் பி சரண் தொடங்கி வைத்த 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' அழகு நிலையம்* பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் 'நேச்சுரல் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.  இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக அறிமுகமாகி, மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 'நான் மகான் அல்ல' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார். இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  வண்ணத்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாள
Image
பெண்ணியத்தை போற்றும் படமாக      "மயிலாஞ்சி" பணம் பதவியில் இருக்கும் இருவர்கள் பெண்கள் என்றாலே போதைப் பொருளாக நினைத்துக் கொண்டு வயசு வித்தியாசம் இல்லாமல் பெண்களை  சீரழித்துக்கொண்டு ஒரு கிராமத்தையே நாசம் செய்து வருகின்றனர். அவர்களிடம் தூண்டில் புழுவாய் ஒரு 14 வயது ஏழைப் பெண் மாட்டி விட அவளை நாசம் செய்கின்றனர். அச்சிறுமியும்  அவமானம் கருதி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். உணவில் விஷம் கலந்து தாய் தந்தைக்கு தர, கதை நாயகர்களால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்படுகிறாள். சட்டத்தால் குற்றவாளிகளை ஒன்றும் செய்து விட முடியாது என்று உணர்ந்த அவர்கள் தங்களது நண்பர்கள் உதவியுட னும் தாங்களும் சேர்ந்து வில்லன்கள் இருவரின் குடும்பம் பணம் பதவியைப் பறித்து நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார்கள். கற்பிழந்தவர்களுக்கு தான் தண்டனை என்ற மனப்பான்மையை மாற்றி நம் பாதகத்தை செய்தவர்களுக்கு தண்டனை என்று வரை வைப்பது தான் மயிலாஞ்சியில் கதை. தண்டிப்பதால் மட்டும் குற்றவாளிகள் திருந்துவதில்லை அவர்களாக திருந்தினால் மட்டும் என்ற சிந்தனையை உணர்த்துவது தான் படத்தின் கதைகளம். குட் ட்ரை என்டர்டைன்மென்ட்  பட நிறுவன

0

Image
*அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவு* 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.  அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இதில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இன்வெஸ்டிகேசன் ஆக்சன்  திரில்லராக உருவா
Image
பரம்பொருள்’  -  விமர்சனம் நாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுவதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் அமிதாஷ் அதற்காக வீடுகளில் புகுந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வருகிறார் அப்படி திருடும்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறார் அமிதாஷ் போலீஸ் வேலையை வைத்து வ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் சரத்குமார், அமிதாஸ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். இந்நிலையில் இவர்களின் கைகளுக்கு 1000  ஆண்டுகள் பழமையான  சிலை ஒன்று கிடைக்கிறது. பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என அறிந்து, அதனை விற்பதற்கு தயாராகிறார்கள். இறுதியில் அந்த சிலையை விற்பனை செய்தார்களா? இல்லையா? எனபதே   ’பரம்பொருள்’   கதை. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இதுவரை இல்லாத