‘ஸ்ட்ரைக்கர்’ - விமர்சனம்
நாயகன் ஜஸ்டின் விஜய் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரில் வந்தவர்  இறந்து விடுகிறார்.

இதே  சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.  அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட நாயகன்  ஜஸ்டின் விஜய்அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார்.   ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க யூடியூபரான கதாநாயகி வித்யா பிரதீப் வருகிறார்.  ஓஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் என்ற ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள்
ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும் போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து கொண்டு கொலை செய்து விடுவதாக  மிரட்டுகிறது.  இறுதியில் அவியிடம் இருந்து ஸ்டின் விஜய்- வித்யா பிரதீப்  உயிர் பிழைத்தார்களா? இல்லையா? என்பதே ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தின் கதை.

நாயகனாக வரும்  ஜஸ்டின் விஜய் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.  .நாயகி  வித்யா பிரதீப் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.இசையும்,  ஒளிப்பதிவும் கதை நகர்விற்கு துணை நிற்கிறது.

Comments

Popular posts from this blog