பரம்பொருள்’  -  விமர்சனம்
நாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுவதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் அமிதாஷ் அதற்காக வீடுகளில் புகுந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வருகிறார் அப்படி திருடும்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறார் அமிதாஷ்

போலீஸ் வேலையை வைத்து வ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் சரத்குமார், அமிதாஸ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்.

இந்நிலையில் இவர்களின் கைகளுக்கு 1000  ஆண்டுகள் பழமையான  சிலை ஒன்று கிடைக்கிறது. பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என அறிந்து, அதனை விற்பதற்கு தயாராகிறார்கள். இறுதியில் அந்த சிலையை விற்பனை செய்தார்களா? இல்லையா? எனபதே   ’பரம்பொருள்’   கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இதுவரை இல்லாத வகையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வருவது புதிதாக இருக்கிறது. கதாநாயகனாக வரும் அமிதாசும் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக போராடு தந்தைக்காக சரத்குமாரை பழிவாங்குவது என இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சிலை வடிக்கும் கலைஞராக நடித்திருக்கும் நாயகி  காஷ்மீரா பர்தேசிக்கு படத்தில் அதிகமான வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.,படம் பார்ப்பவர்களுக்கு அழகான  சிலை போல இருக்கிறார் நாயகி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.  சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரின் நடிப்பு சிறப்பு
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இணிமையாக் உள்ளது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு  இரவு காட்சிகள் அனைத்தும் அளக்க காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 சிலை கடத்தல் கடத்தலை மையக்கருவாக வைத்து அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக கொருத்திருக்கிறார் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ். க்ளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.. ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நம்மை விறுவிறுப்புடன் படம் பார்க்க வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.



Comments

Popular posts from this blog