ஜவான்’ - விமர்சனம்
ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (மாறுவேடத்தில் 5 பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய கடனை அடைகிறார். இதனையடுத்து  சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீரமைக்கிறார்.
சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் நயன்தாரா ஷாருக்கானை  முயற்சி செய்கிறார். இந்நிலையில் நயன்தாராவை ஏமாற்றி ஷாருக்கான் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கும்பல் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரையும் கடத்துகிறது.  இறுதியில் ஷாருக்கான் - நயன்தாரா வில்லன் விஜய் சேதுபதியிடம் இருந்து உயிர் தப்பித்தார்களா? இல்லையா?   நாயகன் ஷாருக்கான்  
விஜய் சேதுபதியை பழிவாங்குவதற்கான காரணம் என்ன?  எனபதே ’ஜவான்’ படத்தின் மகதை.
இராணுவ வீரராக விக்ரம் ரத்தோர் என்ற வேடத்தில் அப்பாவாகவும் , ஜெயிலர் கதாபாத்திரத்தில் அசாத் என்ற வேடத்தில் மகனாகவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் இரண்டு வேடங்களுக்கும் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டுகிறார். ஆக்ஷன்,நடனம் செண்டிமெண்ட் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார்.
காவல்துறை  சிறப்பு அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா அதிரடி காட்சிகளில் மட்டும் இன்றி காதல் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மற்றோரு நாயகியாக வரும் தீபிகா படுகோனே சிறிய வேடம் என்றாலும், ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்படி நடித்திருக்கிறார்.

ஆயுதங்கள் சப்ளை செய்யும் தொழிலதிபராக  நடித்திருக்கும் விஜய் சேதுபதி  வித்தியாசமான இவரது தோற்றத்தில் மிரட்டுகிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாகச் செய்து அசத்தும் இவர்  இந்த வேடத்திலும் அசத்தி இருக்கிறார். ரியாமணி, சான்யாமல்ஹோத்ரா, யோகிபாபு என படத்தில் நடித்த அனைவரும்  சரியாக செய்திருக்கிறார்கள்

அனிருத்தின் இசையில் பாடல்கள்  ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதை நகர்விற்கு துணை நிற்கிறது.மிகப்பிரம்மாண்டமாகத் தெரிய பெரிதும் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இரட்டை வேட காட்சிகளை சிறு குறை கூட தெரியாதவாறு அழகாக கையாண்டிருக்கிறார்.
 சமூகத்தில் நடக்கும் அரசியல் உழலைப் பற்றி  பேச நினைத்திருக்கும் இயக்குனர் அட்லீ  அதை சரியான விதத்தில் கொண்டு  செல்ல முயற்சி செய்திருக்கிறார். இந்த படத்தின்  காட்சிகளை பார்க்கும் போது  பல படத்தின் சாயல் தெரிகிறது. 

ஆடல், பாடல், சண்டை, கமர்சியல், ஹீரோயிசத்தை தாண்டி #jawan படம்

Comments

Popular posts from this blog