’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ -  விமர்சனம்
லண்டனில் நாசர் நடத்தி வரும் ஸ்டார் ஓட்டலில் பிரபல ஷெப்பாக பணியாற்றுகிறார். அனுஷ்கா   அப்பா - அம்மா பிரிவால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அனுஷ்கா தன் தாயுடன் சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அம்மா  ஜெயசுதா இறந்து விடுகிறார். அம்மாவின்   மறைவிற்கு  பிறகு தனது அம்மாவுக்கு தான் எப்படி துணையாக இருந்தேனோ அதுபோல் தனக்கும் ஒரு குழந்தை துணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படி, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் அனுஷ்கா, செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகுகிறார்.
எதிர்பாரதாவிதமாக நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்க நேருகிறது. ஸ்டண்டப் காமெடி மீது ஆர்வமுள்ள நவீன் பொலிஷெட்டியின் அனுகுமுறை அனுஷ்காவுக்கு பிடித்து போக, அவர் தான் தனது குழந்தைக்கு சரியான நபராக இருப்பார், என்று முடிவு செய்கிறார். இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் மீதகதை.
நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா வழக்கம் போல அசத்தி இருக்கிறார் .   தாய் இறந்த பின் சோகம், நவீன் பொலிஷெட்டியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் என யதார்த்தாமாக நடித்திருக்கிறார். நாயகனாகவரும்  நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைக்கிறார். வயதில் தன்னை விட மூத்தவர் என்பதால், அவர் மீது ஏற்பட்ட காதலை தனது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது.
அனுஷ்காவின் அம்மாவாக வரும் ஜெயசுதா நாயகனின் அம்மா-அப்பாவாக நடித்திருக்கும் துளசி, முரளி சர்மா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு சரியான தேர்வாக உள்ளனர் இசையமைப்பாளர் ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்  கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.  நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
ஒரு சர்ச்சைக்குரிய கதையை படமாக்கியிருக்கும் இயக்குனர்  பி மகேஷ் பாபு படத்தில் எவ்வளவு நேர்த்தியாக சொல்ல.முடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். முதல் பாதி கலகலப்பாகவும்     இரண்டாம் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.

Comments

Popular posts from this blog