கெழப்பய’  -  விமர்சனம்
65 வயதுடைய கதையின் நாயகன் கதிரேசகுமார் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். பணிமுடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது அது கிராமபுற சாலை என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். அந்த காரில் கர்ப்பிணி பெண் ஒருவரோடு சேர்த்து 5 பேர் அந்த காரில் வருகிறார்கள்.
கார் ஓட்டுனர்  வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார்  ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள்.
அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து  மகனுக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. மகன் வந்து கூப்பிட்டும் வர மறுக்கிறார் கதிரேசகுமார் இறுதியில் கதிரேசகுமார் காரை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் என்ன?  என்பதே ’கெழப்பய’  படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரேசகுமார்  கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
படம் முழுவதுமே பேசாமலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.  காருக்கு வழிவிடாமல் அவர் செய்யும் விஷயங்கள் அவர் மீது கோபம் ஏற்பட வைத்தாலும், பிறகு அவர் எதற்காக அப்படி செய்கிறார், என்ற விஷயம் தெரிந்த பிறகு அவர் மீது இரக்கம் ஏற்படுகிறது. படத்தின் முழுக்கதையையும் தன் தோல் மீது சுமந்து செல்கிறார். காரில் பயணித்தவர்கள், ஊர் மணியக்காரர், போலீஸ்காரர் , ஊர்மக்கள் என படத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெபியின் இசையும்,பின்னணி இசை கதைக்கு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. நடுரோட்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை சுவாரஷ்யமாக  இருக்கும்படி  கதையை  படமாக்கி இருக்கிறார்  ஒளிப்பதிவாளர் அஜித்குமார்  

ஒரு சாதாரண சம்பவத்தை வைத்துக்கொண்டு கத்தியை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் யாழ் குணசேகரன்   படத்தில் முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம்   இரண்டாம் பாதியில் சற்று குறைவாகவே உள்ளது. அனைவரும் ரசிக்கும் விதத்தில் உள்ளது.



Comments

Popular posts from this blog