Posts

Showing posts from June, 2023
Image
‘ரெஜினா’ - விமர்சனம் நாயகி னைனாவின் அப்பா ஒரு சமுக ஆர்வலர் அவரை சுனைனாவின் கண் முன்னேயே சிலர் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர்., அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சுனைனாவிற்கு பல வருடங்கள் கழித்து நாயகன் அனத்நாக்வுடன் காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், சுனைனாவின் கணவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார் ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது சுனைனாவின் கணவரை கொலை செய்து விட்டு செல்கின்றனர் மீண்டும் மீள முடியாத துக்கத்திற்கு ஆளாகும் சுனைனா கணவரை கொன்றவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார் , இறுதியில் கணவரை கொன்றவர்களை சுனைனா பழி வாங்கினாரா ? இல்லையா? என்பதே ரெஜினா’ படத்தின் கதை. கதை நாயகியாக நடித்திருக்கும் சுனைனா முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பதால் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். பழிவாங்கும் படலத்தில் அதிகம் பேசாமலேயே இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அமைதியான நடிப்பில் ஆர்ப்பரிக்கிறார்.சாத
தண்டட்டி’  - விமர்சனம் தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி ரோகிணி  திடீர் என காணாமல் போகிறார். சில நாட்களில் ஒய்வு பெற இருக்கும் காவலர், பசுபதி. குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  விசாரணைக்கு ஆளாகி வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அந்தப் பகுதியில் இருக்கும்  கிடாரிப்பட்டி  கிராமத்திற்கு  போலீஸ் போகாது. ஏனென்றால் அந்த ஊர்க்காரர்களே பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். தவிர, போலீஸையும் மதிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிறுவன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று  புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் .  . சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் காவலர் பசுபதி   காணாமல் போன அந்த மூதாட்டி ரோகிணி என்று கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.   ரோகிணி காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போடுகின்றனர்.  இந்த நிலையில் பிணமாக இருக்கும் ரோகிணியின்  கா
Image
தண்டட்டி’  - விமர்சனம் தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி ரோகிணி  திடீர் என காணாமல் போகிறார். சில நாட்களில் ஒய்வு பெற இருக்கும் காவலர், பசுபதி. குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  விசாரணைக்கு ஆளாகி வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அந்தப் பகுதியில் இருக்கும்  கிடாரிப்பட்டி  கிராமத்திற்கு  போலீஸ் போகாது. ஏனென்றால் அந்த ஊர்க்காரர்களே பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். தவிர, போலீஸையும் மதிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிறுவன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று  புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் .  . சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் காவலர் பசுபதி   காணாமல் போன அந்த மூதாட்டி ரோகிணி என்று கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.   ரோகிணி காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போடுகின்றனர்
Image
*விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம்  ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது* தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,  SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  தமிழரசன் திரைப்படம் மகனை கப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் கதை. நியாயமான விசயத்திற்குக் குரல் தந்ததற்காக சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி தமிழரசன்,  அவரது மகனுக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் பணம் இருந்தால் மட்டுமே மகனைக் காப்பாற்ற முடியும் எனும் சூழலில், அவரது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் கோபமடையும் தமிழரசன், மகனைக் காக்க முழு மருத்துவமனையையும், துப்பாக்கி முனையில் தன்
Image
இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்திய 2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற 4-வது சர்வேதச அளவிலான எண்கணிதப் போட்டி வெ ற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு- கோப்பைகள் வழங்கப்பட்டது சென்னை, ஜீன்.24- அகில இந்திய அளவில் சுமர் 2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்கும் 4-வது சர்வேதச அபாகஸ் அடிப்படையிலான  எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது. வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் சர்வதேச அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 4-வது சர்வதே எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை வரும் 24-தேதி (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. . இந்த ஆண்டு நடந்த சர்வதேச அபாகஸ் அடிப்படையிலான  எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த சர்வதேச போட்டியினை சிறப்பான முறைய
Image
’அழகிய கண்ணே’ - விமர்சனம் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் நாயகன் லியோ சிவகுமார் அம்மா,தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்பது இவரது லட்சியம் அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர பல முயற்சிகள் செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த மேல்ஜாதி பெண்ணான சஞ்சிதாவை  காதலிக்கிறார். சென்னை சென்று உதவி இயக்குனர் ஆன பிறகு சில காரணங்களால் நாயகி சஞ்சிதாவை திருமணமும் செய்துகொள்கிறார் , இவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்த பிறகு பல போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். இறுதியில் நாயகன்  லியோ சிவக்குமார், இயக்குனராக  ஆனாரா? இல்லையா? என்பதே  ’அழகிய கண்ணே’ படத்தின் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார்  அறிமுக நடிகர் போல இல்லாமல் காதல்,ஆக்ஷன்,செண்டிமெண்ட்  என அனைத்திலும்  சிறந்த நடிப்பை கொடுத்த்திருக்கிறார்  நாயகி  சஞ்சிதா ஷெட்டி, கிராமத்து பெண்ணாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்  கொடுத்திருக்கிறார். கைக்
Image
தலைநகரம் 2 ‘ - விமர்சனம் சென்னையில் நாயகன் சுந்தர் சி  ரவுடி தொழிலை கைவிட்டு,தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.  ரியல் எஸ்டேட் தொழிலில் வரவேண்டிய தரகு தொகையை வசூலிப்பதற்காக பிரபல நடிகையிடம் நேரடியாக சென்று தரகு தொகையைக் கேட்கிறார் தம்பி ராமையா. இன்னொரு பக்கம் சென்னையில் வடக்கு, தெற்கு, மத்திய சென்னை என்று பகுதிகளைப் பிரித்துக் கொண்டு ஆட்டிப்படைக்கும் மூன்று ரவுடிகளுக்குள் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ரவுடி விஷால் ராஜனின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபல நடிகையான பாலக் லால்வானியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையில் தேவையில்லாமல் தம்பி ராமையா சிக்குகிறார். தம்பி ராமையாவை காப்பாற்ற சென்னையை ஆட்டிப்படைக்கும் மூன்று  ரவுடிகளுக்கும், சுந்தர். சிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் யார்?  வெற்றி பெறறார்கள்  என்பதே  ‘தலைநகரம் 2  படத்தின் கதை. நாயகன் சுந்தர் சி ஆக்சன் காட்சிகளில்  மிரட்டி எடுத்திருக்கிறார்.முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவ்வளவு ஆக்சனையும் செய்கிறார்.  ஆ
Image
பாயும் ஒளி நீ எனக்கு’  - விமர்சனம் நாயகன் விக்ரம் பிரபு  தகவல் தொழில்நுட்ப  நிறுவனம் ஒன்றை சொந்தமாக  நடத்தி வருகிறார்.  சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் கண்பார்வையில் குறைபாடு கொண்டவராக இருக்கிறார் குறைந்த வெளிச்சத்தில் கண் பார்வை தெளிவாக இருக்காது, அதிகமான வெளிச்சத்தில் மட்டுமே கண் பார்வை சரியாக தெரியும், இவருடைய சித்தப்பா ஆனந்த் தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்து வருகிறார்.. ஆனந்த் தனது மகள்  திருமணத்திற்காக திருமண ஏற்பாட்டாளரான நாயகி வாணி போஜனை  நியமிக்கிறார்.. வாணி போஜனை பார்த்ததும் காதல் கொள்கிறார் விக்ரம் பிரபு. பிறகு  இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திடீரென விக்ரம் பிரபுவின் சித்தப்பா  ஒரு கும்பல் கடத்தி அவர் கண்ணெதிரே கொலை செய்கிறது.  இறுதியில் சித்தப்பாவை கொலை செய்தவர்களை விக்ரம் பிரபு கண்டுபிடித்து பழி வாங்குகிறாரா? இல்லையா?  என்பதே  ’பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை.   நாயகன் விக்ரம்பிரபு. தோற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம்  காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிக அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் ஒரு பார்வை குறைவானவன் எப்படி செயல்படுவ
Image
30,000 முதல் 30,00,000 வரை 'அக்வா ஃபீல்' (Aquafeel.in )குளியல் தொட்டி இன்றைய சூழலில் அனைத்து தரப்பு மக்களும் காலையில் எழுந்ததும் நீராடுவது வழக்கம். ஆனால் ஒரு பிரிவினர், நீராடுவதிலும் அறிவியல் பூர்வமான விசயங்களை இணைத்து பிரத்யேக குளியல் தொட்டியை உருவாக்கி அதில் நீராடி புத்துணர்வை பெறுகின்றனர். மேலும் இது தொடர்பாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் ப்ராப்பர்ட்டி ஃபேர் எனும் வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருள் தொடர்பான தேசிய அளவிலான கண்காட்சியில் நவீன ரக குளியல் தொட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் இடம் பிடித்திருந்தது. கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களில் கவனத்தைக் கவர்ந்த இந்த குளியல் தொட்டி குறித்து மேலதிக விவரங்களை பெறுவதற்காக இத்துறை நிபுணரும், 'அக்வா ஃபீல்'(Aqua Feel) எனும் நவீன ரக குளியல் தொட்டியை சந்தையில் அறிமுகப்படுத்தியவருமான தொழிலதிபர் திரு. மனோஜ்குமாரை (Manoj Kumar -www.aquafeel.in ) சந்தித்து விளக்கம் கேட்டோம்.  இது தொடர்பாக அவர் பேசுகையில், '' பாத் டப் எனும் குளியல் தொட்டியில் குளிப்பது அதிகரித்து வருகிறது. ஷவர் எனப்படும் செயற்க
Image
பானி பூரி’  இணையத் தொடர் - விமர்சனம்       ஐ டி  நிறுவனத்தில் வேலை பார்க்கும்  நாயகன் லிங்காவும், நாயகி ஜம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று நாயகன் லிங்கா ஆசைப்படுகிறார். தோழியின் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது, திருமணம் ஆன பிறகு மாறிவிடும், என்று  நினைத்து குழப்பமடையும் சம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார். சம்பிகாவின் இந்த முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்ல விஷயம் சம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல் காதலர்களுக்கு யோசனை சொல்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் – மனைவி போல் வாழும் லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் 7 நாட்கள் வாழ வேண்டும் இந்த 7 நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம் இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி இருவரும் தனியாக ஒரு வாரம் தனி வீட்டில் வாழச் இருவரும் செல்கின
Image
அஸ்வின்ஸ்’ -  விமர்சனம் இந்தியாவில் அமானுஷ்யங்கள் பற்றி யூ டியூப் சேனலில் வீடியோக்களை  போடுபவர்கள் வசந்த்ரவி மற்றும் குழுவினர்  லண்டன்  தீவில் உள்ள  ஒரு பங்களாவில் நடக்கும் அமானுஷயங்களை வீடியோ படமாக்கி  தரக் கேட்டு வாய்ப்பு வருகிறது. இதையடுத்து வசந்த்ரவி குழு லண்டன் செல்கிறது. நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர்  அந்த தீவில்  இருக்கும் பங்களாவிற்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர்.  அந்த பங்களாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் பல ஆண்டு காலப் பழமையான ஒரு பிரச்சனை  இருக்கிறது.  இறுதியில் வசந்த்ரவி மற்றும் குழுவினர் அந்த பங்களாவில் இருந்து   உயிருடன் தப்பித்தார்களா? இல்லையா?  எனபதே ’அஸ்வின்ஸ்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை  தனது நடிப்பி
Image
*ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது* *மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் உற்சாகம்* *திரையுலகினர்.. ரசிகர்கள்.. வாழ்த்து* தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.  இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின்
Image
’தலைநகரம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்! Jaise Jose  முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகள்! - ‘தலைநகரம் 2’ மூலம் கோலிவுட்டில் கால் பதித்த பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்  லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மேலும் ஒரு பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரி டாட்ஸ்’ (3 Dots) படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். ‘லூசிஃபர்’, ‘காபா’, ‘நாயட்டு’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய்ஸி ஜோஸ், சமீபத்தில் வெளியாகி மிகப்
Image
ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ் மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதையான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ஜூன் 22ம் தேதி படம் வெளியாகும்போது, இது ரசிகர்களை நிச்சயம் கவரும்’ என்றார்.
Image
*நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* *நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' படத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்திய படக்குழு* நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் 'ஸ்பை', ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகாலா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார். திரி
Image
பொம்மை - விமர்சனம்  சென்னையில் தனியாக வசித்து  வரும் நாயகன்  எஸ்.ஜே.சூர்யா  பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும்  பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்  மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர் அதற்காக  மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை ஒன்று  தன் பள்ளி காலத்து காதலியான நந்தினியை( பிரியா  பவானிசங்கர்)  நியாபகப்படுத்துகிறது . இதையடுத்து கற்பனையில் அந்த பொம்மையை காதலியாக நினைத்து வாழ்க்கை வாழ்கிறார்.  இந்நிலையில் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த  குறிப்பிட்ட நந்தினி பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.  இதனால் கோபத்தில் நிறுவன  சூப்பர்வைசரை அடிக்க அவரின் இறப்பிற்கு காரணமாகின்றார். எஸ்.ஜே. சூர்யா  இதையடுத்து நந்தினி பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார்.    சூப்பர்வைசார்  கொலை தொடர்பாக  போலீஸ்  விசாரணை நடக்கிறது   இறுதியில் எஸ்.ஜே.சூர்யா போலீசில்  மாட்டினாரா?  இல்லையா?  என்பதே  பொம்மை  படத்தின் கதை. மனநல பாதிக்கப்