தலைநகரம் 2 ‘ - விமர்சனம்
சென்னையில் நாயகன் சுந்தர் சி  ரவுடி தொழிலை கைவிட்டு,தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.  ரியல் எஸ்டேட் தொழிலில் வரவேண்டிய தரகு தொகையை வசூலிப்பதற்காக பிரபல நடிகையிடம் நேரடியாக சென்று தரகு தொகையைக் கேட்கிறார் தம்பி ராமையா. இன்னொரு பக்கம் சென்னையில் வடக்கு, தெற்கு, மத்திய சென்னை என்று பகுதிகளைப் பிரித்துக் கொண்டு ஆட்டிப்படைக்கும் மூன்று ரவுடிகளுக்குள் அதிகாரப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ரவுடி விஷால் ராஜனின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபல நடிகையான பாலக் லால்வானியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையில் தேவையில்லாமல் தம்பி ராமையா சிக்குகிறார். தம்பி ராமையாவை காப்பாற்ற சென்னையை ஆட்டிப்படைக்கும் மூன்று  ரவுடிகளுக்கும், சுந்தர். சிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் யார்?  வெற்றி பெறறார்கள்  என்பதே  ‘தலைநகரம் 2  படத்தின் கதை.
நாயகன் சுந்தர் சி ஆக்சன் காட்சிகளில்  மிரட்டி எடுத்திருக்கிறார்.முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவ்வளவு ஆக்சனையும் செய்கிறார்.  ஆனால் எதிரிகளை பழிவாங்கும் காட்சிகள் கொடூரமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்
கதாநாயகி பாலக் லால்வானி நடிகையாக இருந்து கொண்டு வில்லனுக்கு ஆசை நாயகியாக இருக்கிறார். பிறகு சுந்தர்.சி-யால் ஈர்க்கப்பட்டு அவருடனே பயணிக்கிறார் . வில்லன்களாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகரன், விஷால் ராஜன், ஜெய்ஸி ஜோஸ் ஆகியோர் உருவத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்கள்.
தம்பி ராமையா அனுபவ  நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு  நியாயம் சேர்த்திருக்கிறார். தம்பி ராமையாவின் மகளாக நடித்திருக்கும் ஐரா  அளவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்பதற்கு  இனிமை , பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றது போல் உள்ளது. இ.கிரிஷ்ணசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சண்டைக்காட்சிகளை அற்புதமாக  படமாக்கியிருக்கிறார்.

தலைநகரம்’ படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வி.இசட்.துரை மூன்று வில்லன்களுக்கு சுந்தர்.சி-க்கும் இடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் மொத்த படத்தையும் நகர்த்தி சென்றிருக்கிறார். 



Comments

Popular posts from this blog