பொம்மை - விமர்சனம் 

சென்னையில் தனியாக வசித்து  வரும் நாயகன்  எஸ்.ஜே.சூர்யா  பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும்  பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்  மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர் அதற்காக  மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை ஒன்று  தன் பள்ளி காலத்து காதலியான நந்தினியை( பிரியா  பவானிசங்கர்)  நியாபகப்படுத்துகிறது . இதையடுத்து கற்பனையில் அந்த பொம்மையை காதலியாக நினைத்து வாழ்க்கை வாழ்கிறார். 

இந்நிலையில் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த  குறிப்பிட்ட நந்தினி பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.  இதனால் கோபத்தில் நிறுவன  சூப்பர்வைசரை அடிக்க அவரின் இறப்பிற்கு காரணமாகின்றார். எஸ்.ஜே. சூர்யா 
இதையடுத்து நந்தினி பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார்.    சூப்பர்வைசார்  கொலை தொடர்பாக  போலீஸ்  விசாரணை நடக்கிறது   இறுதியில் எஸ்.ஜே.சூர்யா போலீசில்  மாட்டினாரா?  இல்லையா?  என்பதே  பொம்மை  படத்தின் கதை.
மனநல பாதிக்கப்பட்டவராக நாயகன்  எஸ்.ஜே.சூர்யா  இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பொம்மையை உருகி உருகி காதலிப்பதும் பொம்மையை மற்ற ஆண்கள் பார்த்தால் அவர்களை கொலை செய்யயும் அளவிற்கு  செல்வது என  ஆக்ரோஷ நடிப்பை வழங்கி இருக்கிறார்.  எஸ்.ஜே. சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார்.  
பொம்மையாக நடித்திருக்கும்  நாயகி  பிரியாபவானிசங்கர்  நடிப்பு அருமை .  அள்ளிக்கொள்ளும் அழகு. முகபாவனைகளில் ஈர்க்கிறார். அந்தவகையில் இதில் பிரியா பவானி ஷங்கர் பொம்மையாகவே  வாழ்ந்திருக்கிறார். மற்றோரு நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிதமிழரசனுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்க்கிறார். 
இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜாவின் இசை என்றாலும் படம் நெடுக இளையராஜாவின் தெய்வீகராகம் பாடல் மீட்டும் கேட்கும் ரகம் மற்ற பாடல்கள் மெலோடியாக உள்ளது.  பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள்அழகாக இருக்கிறது.
வித்தியாசமான கதையை இயக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். அதேநேரத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் தொடர்பான கற்பனை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை பார்க்கும் போது இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காததை செய்திருக்கிறார் இயக்குனர்  ராதாமோகன்.



Comments

Popular posts from this blog