’அழகிய கண்ணே’ - விமர்சனம்
திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் நாயகன் லியோ சிவகுமார் அம்மா,தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்பது இவரது லட்சியம் அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர பல முயற்சிகள் செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த மேல்ஜாதி பெண்ணான சஞ்சிதாவை  காதலிக்கிறார்.

சென்னை சென்று உதவி இயக்குனர் ஆன பிறகு சில காரணங்களால் நாயகி சஞ்சிதாவை திருமணமும் செய்துகொள்கிறார் , இவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்த பிறகு பல போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். இறுதியில் நாயகன்  லியோ சிவக்குமார், இயக்குனராக  ஆனாரா? இல்லையா? என்பதே  ’அழகிய கண்ணே’ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார்  அறிமுக நடிகர் போல இல்லாமல் காதல்,ஆக்ஷன்,செண்டிமெண்ட்  என அனைத்திலும்  சிறந்த நடிப்பை கொடுத்த்திருக்கிறார் 
நாயகி  சஞ்சிதா ஷெட்டி, கிராமத்து பெண்ணாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்  கொடுத்திருக்கிறார். கைக்கு குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள்  இல்லாமல் அவர் தவிக்கும் தவிப்பு  தன ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார்.
சிங்கம் புலி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. அமுதவாணன் மற்றும் ஆண்ட்ரூஸ் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்  மக்கள் செல்வன்  விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றமும், இயக்குநர் பிரபு சாலமனின் கதாபாத்திரமும், ராஜ் கபூர் அனுபவ நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது  பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.  அசோக் குமாரின் ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.

 இயக்குநர் ஆர்.விஜய குமார், உதவி இயக்குநரின் வாழ்க்கையை அழகான காதல் கதை மூலம் சொல்லியிருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக எளிமையாகவும், இனிமையாகவும் சொல்லியிருக்கிறார். .

நடிகர்கள்  : லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கம் புலி, இயக்குநர் பிரபு சாலமன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி



Comments

Popular posts from this blog