அஸ்வின்ஸ்’ -  விமர்சனம்
இந்தியாவில் அமானுஷ்யங்கள் பற்றி யூ டியூப் சேனலில் வீடியோக்களை  போடுபவர்கள் வசந்த்ரவி மற்றும் குழுவினர்  லண்டன்  தீவில் உள்ள  ஒரு பங்களாவில் நடக்கும் அமானுஷயங்களை வீடியோ படமாக்கி  தரக் கேட்டு வாய்ப்பு வருகிறது. இதையடுத்து வசந்த்ரவி குழு லண்டன் செல்கிறது.

நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர்  அந்த தீவில்  இருக்கும் பங்களாவிற்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர்.  அந்த பங்களாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் பல ஆண்டு காலப் பழமையான ஒரு பிரச்சனை  இருக்கிறது.  இறுதியில் வசந்த்ரவி மற்றும் குழுவினர் அந்த பங்களாவில் இருந்து   உயிருடன் தப்பித்தார்களா? இல்லையா?  எனபதே ’அஸ்வின்ஸ்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை  தனது நடிப்பின் மூலம் சிறப்பாக  செய்து  படம் பார்க்கும் நம்மையும் பயப்பட வைக்கிறார்  ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது    

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன்,படத்தின் கதை நகர்விற்ற்கு துணை நிற்கிறார் . படத்தின் இடண்டாம் பாதியில் இவருடைய நடிப்பு மிரள வைக்கிறது.

விஜய்சித்தார்த்தின் பின்னணி இசை படம் முழுவதும் திகில் அனுபவத்தை கொடுக்கிறது .எட்வின்சாகேவின் ஒளிப்பதிவு அந்த  பங்களா அமைந்திருக்கும் தீவையும், அந்த தீவின் அதிசயத்தையும் நம் கண்களைவிட்டு மறையாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
                         
அஸ்வினர்கள் கதையை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தருண் தேஜா அமானுஷ்ய விசயங்களை வைத்துக் கொண்டு ஆழமான உளவியல் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கிறார்  படத்தின் ஆரம்பத்தில் இருந்தது இறுதி வரை படம் பார்ப்பவர்களை பயப்பட வைத்திருக்கிறார் இயக்குன

Comments

Popular posts from this blog