தண்டட்டி’  - விமர்சனம்
தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி ரோகிணி  திடீர் என காணாமல் போகிறார். சில நாட்களில் ஒய்வு பெற இருக்கும் காவலர், பசுபதி. குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  விசாரணைக்கு ஆளாகி வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.
அந்தப் பகுதியில் இருக்கும்  கிடாரிப்பட்டி  கிராமத்திற்கு  போலீஸ் போகாது. ஏனென்றால் அந்த ஊர்க்காரர்களே பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். தவிர, போலீஸையும் மதிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிறுவன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று  புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் .  .
சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் காவலர் பசுபதி   காணாமல் போன அந்த மூதாட்டி ரோகிணி என்று கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.  
ரோகிணி காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போடுகின்றனர்.  இந்த நிலையில் பிணமாக இருக்கும் ரோகிணியின்  காதில் இருக்கும் தண்டட்டி காணாமல் போகிறது  இறுதியில் காவலர் பசுபதி காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’தண்டட்டி படத்தின் கதை.
தங்கப்பொண்ணு  கதாபாத்திரத்தில்  மூதாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். குறைவான காட்சிகள் இருந்தாலும் அதை  நிறைவாக            
 செய்திருக்கிறார்.
காவலர்  வேடத்தில் நடித்திருக்கும் பசுபதி,அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான  நடிப்பை கொடுத்திருக்கிறார். முழு படத்தின்  கதையையும்  தன் தோல் மீது  தூக்கி செல்கிறார். இறுதி காட்சியில் யாரும் யூகிக்க முடியாத ஒன்றை  செய்து  ரசிகர்களை கவர்கிறார்.
இளம் வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, சிறிது நேரம் வந்தாலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ரோகிணியின் குடிகார மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா செய்யும் அளப்பறைகளை பார்க்கும் போது இந்த கதாபாத்திரம் இவரை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது  என்று  தோன்றுகிறது.. ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் கொடுத்த  வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய  பலமாக உள்ளது.. மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலை அழகாகக் காட்டுகிறது . சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களையும் உணர வைக்கிறது

தண்டட்டியை மையமாக வைத்து அதில் ஒரு  அழகான காதல் கதையை தண்டட்டியோடு சம்மத்தப்படுத்தி   நகைச்சுவையோடு அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் ஒரு கிராமத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்  ராம் சங்கையா



Comments

Popular posts from this blog