Posts

Showing posts from March, 2024
Image
*நாம் மறந்துவிட்ட குடும்ப விழுமியங்களை 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் நினைவுபடுத்துகிறது' - ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்* இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் 'டான்', 'தலாஷ்', மற்றும் 'அந்தாதூன்' போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' எனும் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியிருக்கிறார். வாசு வர்மா இப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளா
Image
பாரதி மோகன் இயக்கத்தில் "S/o காலிங்கராயன்" 2010 லிருந்து 2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையின் பழங்குடி மக்களின் விளை நிலங்களை சீரழிந்த காடுகள் என்ற பெயரில் வன உரிமை பற்றி குறிப்பிடாமல் காடு வளர்ப்பு என்ற பெயரில் மத்திய மாநில அரசின் கட்சிகளை சார்ந்த தொழிலதிபருக்கும் சாமியார்களுக்கும் அன்றைய ஆளும்கட்சி  பிரமுகர்களின் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டன. பாரம்பரியமாக வாழும்மேற்கு தொடர்ச்சி பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான காட்டு நிலங்கள் ஆன்மீக  வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.  S/O காலிங்கராயன் படத்தின் மூலம் உழுபவனே முதன்மையானவன் என்று உலகுக்கு சொல்லும் படமாகவும் கருத்தாகவும்தன் தாய்நிலங்களை அபகரித்து ஆதிவாசி பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நின்று போராடும் ஒரு ஜமீன் வாரிசு மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகிய இருவரின்  கதையாகும் என்கிறார் இயக்குனர் பாரதிமோகன். சன்ஷைன் ஸ்டுடியோஸ் சார்பில் அனந்தகோடி சுப்ரமணியம்  தயாரிப்பில் சதீஷ் கண்ணா இணை தயாரிப்பில் பாரதிமோகன் எழுதிஇயக்கி இருக்கிறார். இவர் ராமராஜன் நடித்த ரயிலுக்கு நேரமாச்சு,
Image
’ரெபல்’ - விமர்சனம் 1980களில் மூணாறு பகுதியில் வாழ்ந்து வரும் ஜி வி பிரகாஷ் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இவர்களது பெற்றோர்கள் அங்குள்ள டீ எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். தங்கள் பெற்றோர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் இவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்நிலையில் ஜி வி பிரகாஷுக்கும் ஆதித்யாவிற்கும் பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனையடுத்து , இருவரும் அந்த கல்லூரியில் படிக்கச் செல்கின்றனர். அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். , தமிழக மாணவர்களை கண்டாலே விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  ஒரு கட்டத்தில் ஜி வி பிரகாஷின்  நண்பனான ஆதித்யா, மலையாள மாணவர்களால் அடித்துக் கொல்லப்படுகிறார். இறுதியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ்  மலையாள மாணவர்களுக்கு
Image
படை தலைவனுக்கு பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ் புரட்சி கலைஞர் விஜயகாந்த்  அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார். இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது  ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..மேலும் தயாரிப்பாளர்,  ம
Image
செஞ்சமர் -------------------- ஈழத் தமிழர்களின் தலைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவருமான பிரபாகரன் அவர்களோடு யுத்த களத்தில் நின்று போராடிய "பிரிக்கேட் இயர்"  பால்ராஜ் மற்றும் "பிரிக்கேட் இயர்"         தமிழினி இவர்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "செஞ்சமர் ". இறுதிப் போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் அல்லது இதுவரை என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருக்கும் தமிழர்கள் திரும்பி வருவார்களா, வரமாட்டார்களா ?என்ற ஆய்வை செய்வதற்காக, இலங்கைக்குள் ஐ.நா போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு கதைகளம் துவங்குகிறது.இந்த இறுதி போருக்கு முன்னால் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை போராட்டம் எப்படி இருந்தது என்பதை இந்த படம் எடுத்து விளக்குகிறது. இந்த படம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மத்தியில் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்கிறார் இயக்குனர். இப்படத்தை அதிரை தமீம் அன்சாரி இயக்க,  மெய் மறந்தேன், சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, வாடி ராசாத்தி முதலிய படங்களை தயாரித்த C.G.M  பிக்சர்ஸ் மணிவண்ணன் தயாரிக்கின்றார்.
Image
‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘  மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !!  “சிவா மனசுல சக்தி” படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து,  ரீ ரிலீஸாகும்  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !!  பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!  சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு  வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது.  இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும்,  ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் மார்ச் 22 ஆம் தேதி, இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது.  ‘சிவா மனசுல சக்தி’  படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர்  ராஜேஷ்.M பெரும் உற்சாகத்தில் உள்ளார். இயக்குநர்  ராஜேஷ்.M  இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம்  நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்
Image
’பிரேமலு’  -  விமர்சனம் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி படிக்கும் நாயகன் நஸ்லென் அதே கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல், தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால் அதுவும் முடியாமல் போகிறது. இந்நிலையில் கல்லூரி பேராசிரியர் திருமணத்திற்க்காக தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு  திருமண நிகழ்ச்சியில்  நாயகி மமிதா பைஜுவை சந்திக்கும் நஸ்லென், அவர் மீது காதல் வயப்படுகிறார். சென்னைக்கு போக நினைத்த நஸ்லென், மமிதாவை காதலிப்பதற்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார். இதனையடுத்து மமிதாவிற்கும் அவருடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷ்யாம் மோகனும் காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொள்கிறார். இருப்பினும் தொடர்ந்து மமிதாவை காதலிக்கும் நஸ்லென், ஒரு கட்டத்தில் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார் இறுதியில் நாயகி மமிதா பைஜு நாயகன் நஸ்லென் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே ’பிரேமலு’  படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் நஸ்லென், இயல்பான நடிப்பை வழ
Image
அமீகோ கேரேஜ்’   -  விமர்சனம் பெற்றோர்களுக்கு ஒரே மகனாக நாயகன் மாஸ்டர் மகேந்திரன்,பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை அடித்து விட அதே பகுதியில் கேரேஜ் வைத்து ஜி.எம்.சுந்தரிடம் சொல்லுகிறார். ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி வந்து அடிக்கிறார். அன்றையில் இருந்து மகேந்திரன் ஜி.எம் சுந்தர், இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. .அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே ஊரில் மிகப் பெரியாக ரௌடியாக இருக்கும் முரளிதரன் சந்திரனுக்கு அடியாளாக இருக்கும் தசரதி நரசிம்மன், மது போதையில்  மகேந்திரனை  கெட்ட  வார்த்தையால் திட்டி விட .இதனால் கோபம் கொள்ளும் மகேந்திரன், தசரதி நரசிம்மனை  அடித்து விடுகிறார். இதனையடுத்து  மகேந்திரனை கொலை செய்ய நினைக்கும் தசரதி  ரௌடி முரளிதரன்  மூலம் பழிவாங்க திட்டம் போடுகிறார்.  இறுதியில்  தசரதி  மகேந்திரனை  பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ‘அமீகோ கேரேஜ்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி, இளைஞர்,ரௌடி என ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல்
Image
’ஆராய்ச்சி’ - விமர்சனம் பேப்பர் பேனா சினிமா சார்பில் முத்து பாரதி பிரியன் தயாரிப்பில் எழுத்து,  பாடல்கள் – டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் மருத்துவ திறனாய்வு : வெடிமுத்து, ரவி செல்வன் இயக்கத்தில் முத்து பாரதி பிரியன், அனீஷ், மனிஷா ஜித், செந்தில் குமாரி, சிசர் மனோகர், வெடிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’ஆராய்ச்சி’ மதுரையில் உள்ள  மருத்துவக் கல்லூரியில் மாணவர்களான நாயகன் அனீஷ் மற்றும் நாயகி மனிஷாஜித் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எச்.ஐ.வி நோயை குணப்படுத்தக் கூடிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அனீஷ் ஈடுபடுகிறார்.  மூத்து மருத்துவ ஆராச்சியாளர்  (வெடிமுத்து ) நாயகன்  அனீஷ்  கண்டுபிடிப்புக்கு உதவி செய்கிறார். நாயகி மனிஷாஜித் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அக்கறையோடு கவனித்து வருகிறார். மருத்துவ கல்லூரி மூலம்  மாணவர்களுக்கு  கிராமம் ஒன்றில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யயப்படுகிறது.  இதே  கிராமத்தின் தலைவராக இருக்கும்  வெடிமுத்துவின் மகன்  நாயகன் முத்து பாரதி பிரியன் நாயகி மனிஷாஜித்தை பார்த்தும் காதல் கொள்கிறார். ஒரு
Image
ஆராய்ச்சி திரைப்பட விமர்சனம் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களான நாயகன் அனீஷ் மற்றும் நாயகி மனிஷாஜித் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். எச்.ஐ.வி நோயை குணப்படுத்தக் கூடிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அனீஷ் ஈடுபடுகிறார். அவருக்கு மூத்து மருத்துவ நிபுணர் உதவி செய்கிறார். நாயகி மனிஷாஜித் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு கவனிக்கிறார். இதற்கிடையே மாணவர்கள் கிராமம் ஒன்றில் மருத்துவ முகாம் நடத்துவதற்காக செல்கிறார்கள்.  அந்த கிராமத்தின் தலைவர் வெடிமுத்துவின் மகன் நாயகன் முத்து பாரதி பிரியன் நாயகி மனிஷாஜித்தை ஒருதலையாக காதலிக்கிறார். இந்த நிலையில், எதேச்சையாக மனிஷாஜித்தின் இரத்தம் பரிசோதனை செய்யும் போதும அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிய வருகிறது. தனக்கு எப்படி எச்.ஐ.வி நோய் வந்தது என்று தெரியாமல் குழப்பமடையும் மனிஷாஜித், நாயகன் அனீஷ் தான் தனது ஆய்வுக்காக தன் உடலில் எச்.ஐ.வி கிருமியை செலுத்தியிருக்க வேண்டும், என்று நினைத்து அவரை வெறுக்கிறார். இந்த விசயங்கள் எதுவும் தெரியாத முத்து பாரதி பிரியன் மனிஷாஜித்தை ஜீவிரமாக காதலிக்க
Image
*பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது*  நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.   “இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.    அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள் https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20   மும்பை, இந்தியா- மார்ச் 14, 2024 - இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, வரவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை இன்று அறிவித்தது. நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,)  உருவாக்கத்தில
Image
*Top Hashtags on X in India: Rebel Star P rabhas stands No 1* Rebel star Prabhas stands out among all star heroes with numerous records and achievements. Whether it's unique collaborations, smashing box office records, or extensive pan-global film projects, he consistently leads the pack. This has elevated Prabhas from a Tollywood sensation to a pan-Indian icon. His popularity was recently highlighted in X's (formerly Twitter) list of Top Hashtags in India, where Prabhas emerged as the sole hero featured in the entertainment category's top 10 most utilized hashtags, according to a release by Twitter India. This achievement is seen as a testament to Prabhas' massive social media influence, much to the delight of his fans. With highly anticipated blockbusters like Kalki 2898 AD and Raja Saab on the horizon, Prabhas is set to further captivate audiences and celebrate with his fans.
Image
 அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் ! நாய் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் படம்! விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் 'மஞ்சும்மல் பாய்ஸ் 'போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடிக்கிறது.  திரை நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால்  எஸ்.ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், அயலி மதன், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தலைக்கூத்தல் படத்தின் ஒளிப்பதிவாளரான மார்டின் டான்ரா
Image
நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில், இயக்குநர்  L R சுந்தரபாண்டி இயக்கத்தில், “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!  MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.  சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R  சுந்தரபாண்டி. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்,  தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா,  இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு “போடா போடி, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய
Image
அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், '96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார். குறிப்பாக, '96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், *இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க'* என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந
Image
“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுக
Image
கார்டியன்’  - விமர்சனம் நாயகி ஹன்சிகாவிற்கு  சிறு வயதில் இருந்தே எதை செய்தாலும் தவறாகவே போய் முடிவதால் தான் ஒரு அதிஷ்ட்டம் இல்லாதவள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.  ஒரு கட்டத்தில் கட்டுமான வேலை  நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அவருடைய காலில் சிறிய விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து  ஹன்சிகாவின் வாழ்வில் திடீர் மாற்றம் நிகழ்கிறது. கிடைக்காத வேலை அவருக்கு கிடைப்பதோடு, அவர் என்ன நினைக்கிறாரோ அவை அனைத்துமே நடக்கிறது. ஹன்சிகாவிற்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் வேறு ஒருவருக்கு தீங்கும் நடக்கிறது.  ஹன்சிகா அந்த அமானுஷ்யம் தான் தன் வாழ்க்கையில் ஏற்பட திடீர் மாற்றத்திற்கு காரணம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, சிலரை பழிவாங்க அந்த அமானுஷ்யம் தன்னை பயன்படுத்துவதையும் அவர் தெரிந்துக்கொள்கிறார் இறுதியில் நாயகி ஹன்சிகா அந்த அமானுஷ்யம் யார் ? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா?  ஹன்சிகா அந்த அமானுஷ்யத்திற்கு உதவி செய்தாரா? இல்லையா? எனபதே  ’கார்டியன் படத்தின் கதை. நாயகி நடித்திருக்கும்  ஹன்சிகா. படத்தின் முழுக்கதையையும் தன் தோல் மீது சுமந்து செல்க
Image
’J பேபி’ - விமர்சனம்  ஊர்வசிக்கு  மாறன், தினேஷ்  இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால்  அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார் ஊர்வசி திடீர் என  ஊர்வசி ஒருநாள் காணாமல் போக  அவர் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது. மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் அம்மாவை அழைத்துவர கொல்கத்தா செல்கிறார்கள். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் சில வருடம் பேசாமல் இருக்கின்றனர். இறுதியில் இப்படி பேசாமல் இருக்கும் இருவர் எப்படி  மொழி தெரியாத ஊரில் அம்மாவை கண்டுபித்தார்களா> இல்லையா?  என்பதே ’J பேபி’  படத்தின் கதை. பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி,அந்த தாயின்  கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.திறந்திருக்கும் வீட்டின் கதவுகளை
Image
*மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD' படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.*  ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !!  மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும்  ‘கல்கி 2898 A.D’  படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.  ‘கல்கி 2898 A.D.’ படத்தில்  'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!.  படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ்  ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செய்தியினை
Image
*'கார்த்தி26 ' பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!* *கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!* *ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி!* நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமா