’பிரேமலு’  -  விமர்சனம்

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி படிக்கும் நாயகன் நஸ்லென் அதே கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல், தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால் அதுவும் முடியாமல் போகிறது.

இந்நிலையில் கல்லூரி பேராசிரியர் திருமணத்திற்க்காக தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு  திருமண நிகழ்ச்சியில்  நாயகி மமிதா பைஜுவை சந்திக்கும் நஸ்லென், அவர் மீது காதல் வயப்படுகிறார். சென்னைக்கு போக நினைத்த நஸ்லென், மமிதாவை காதலிப்பதற்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார்.

இதனையடுத்து மமிதாவிற்கும் அவருடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷ்யாம் மோகனும் காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொள்கிறார். இருப்பினும் தொடர்ந்து மமிதாவை காதலிக்கும் நஸ்லென், ஒரு கட்டத்தில் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார் இறுதியில் நாயகி மமிதா பைஜு நாயகன் நஸ்லென் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே ’பிரேமலு’  படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் நஸ்லென், இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கண்டதும் காதல், காதலுக்காக உருகுவது, காதல் தோல்வியால் வாடுவது என அனைத்தையும் சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி மமிதா படத்திற்கு  மிகப்பெரிய பலமாக  இருக்கிறார்.. நட்பு, காதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், டைமிங் காமெடி மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார். ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன்  ஆகியோர் நடிப்பு பாராட்டுக்குரியது

விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் அஜ்மல் கேரளா மற்றும் ஆந்திர கிராமப் பகுதிகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்
வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் மென்மையான காதல் உணர்வை யதார்த்தமான நகைச்சுவையோடு  திரைக்கதை அமைத்திருக்கிறார்  இயக்குநர்.கிரிஷ் ஏ.டி, குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.


நடிகர்கள் :  நஸ்லென் கே. கஃபூர் , மமிதா பைஜூ , அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன்

இசை : விஷ்ணு விஜய்

இயக்கம்  : கிரிஷ் ஏ.டி,

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

Comments

Popular posts from this blog