கார்டியன்’  - விமர்சனம்
நாயகி ஹன்சிகாவிற்கு  சிறு வயதில் இருந்தே எதை செய்தாலும் தவறாகவே போய் முடிவதால் தான் ஒரு அதிஷ்ட்டம் இல்லாதவள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.  ஒரு கட்டத்தில் கட்டுமான வேலை  நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அவருடைய காலில் சிறிய விபத்து ஏற்படுகிறது.

இதனையடுத்து  ஹன்சிகாவின் வாழ்வில் திடீர் மாற்றம் நிகழ்கிறது. கிடைக்காத வேலை அவருக்கு கிடைப்பதோடு, அவர் என்ன நினைக்கிறாரோ அவை அனைத்துமே நடக்கிறது. ஹன்சிகாவிற்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் வேறு ஒருவருக்கு தீங்கும் நடக்கிறது.

 ஹன்சிகா அந்த அமானுஷ்யம் தான் தன் வாழ்க்கையில் ஏற்பட திடீர் மாற்றத்திற்கு காரணம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, சிலரை பழிவாங்க அந்த அமானுஷ்யம் தன்னை பயன்படுத்துவதையும் அவர் தெரிந்துக்கொள்கிறார் இறுதியில் நாயகி ஹன்சிகா அந்த அமானுஷ்யம் யார் ? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா?  ஹன்சிகா அந்த அமானுஷ்யத்திற்கு உதவி செய்தாரா? இல்லையா? எனபதே  ’கார்டியன் படத்தின் கதை.
நாயகி நடித்திருக்கும்  ஹன்சிகா. படத்தின் முழுக்கதையையும் தன் தோல் மீது சுமந்து செல்கிறார்.. முதல் பாதியில் துறுதுறு பெண்ணாக நடித்தவர் இரண்டாம் பாதியில் பேயாக வந்து மிரட்டுகிறார் கதாநாயகனாக பிரதீப் ராயன், நடித்திருக்கிறார். ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை தியாவின் நடிப்பு அருமை

 சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.  மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.. அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா ஆகியோர் கொடுத்த  வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை   பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை. இதில் ஆவியை இணைத்து கமர்சியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். இயக்குனர்கள் குரு சரவணன் -  சபரி  

நடிகர்கள் : ஹன்சிகா , பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா

இசை : சாம்.சி.எஸ்

இயக்கம் : குருசரவணன் மற்றும் சபரி

மக்கள் தொடர்பு :  ரியாஸ்.K.அஹ்மத், யுவராஜ்

Comments

Popular posts from this blog