அமீகோ கேரேஜ்’   -  விமர்சனம்

பெற்றோர்களுக்கு ஒரே மகனாக நாயகன் மாஸ்டர் மகேந்திரன்,பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை அடித்து விட அதே பகுதியில் கேரேஜ் வைத்து ஜி.எம்.சுந்தரிடம் சொல்லுகிறார். ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி வந்து அடிக்கிறார்.

அன்றையில் இருந்து மகேந்திரன் ஜி.எம் சுந்தர், இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. .அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே ஊரில் மிகப் பெரியாக ரௌடியாக இருக்கும் முரளிதரன் சந்திரனுக்கு அடியாளாக இருக்கும் தசரதி நரசிம்மன், மது போதையில்  மகேந்திரனை  கெட்ட  வார்த்தையால் திட்டி விட .இதனால் கோபம் கொள்ளும் மகேந்திரன், தசரதி நரசிம்மனை  அடித்து விடுகிறார்.

இதனையடுத்து  மகேந்திரனை கொலை செய்ய நினைக்கும் தசரதி  ரௌடி முரளிதரன்  மூலம் பழிவாங்க திட்டம் போடுகிறார்.  இறுதியில்  தசரதி  மகேந்திரனை  பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ‘அமீகோ கேரேஜ்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி, இளைஞர்,ரௌடி என ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல்,ஆக்ஷன்,செண்டிமெண்ட், எமோஷனல் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதிரா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல தோன்றுகிறார். படத்தில் காதல் காட்சிகள் குறைவானதாக இருந்தாலும் தனக்கு கொடுத்த நிறைவாக செய்திருக்கிறார்.
அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர் முதல் பாதியில் அனைத்தியாகி இருப்பவர் இரண்டாம் பாதியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் மிரட்டலானநடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்  பின்னணி  இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.  சோலைமுத்துவின் ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு  ஏற்றவாறு உள்ளது.

வழக்கமான  கதையை  அதிரடி கலந்து முழுநீள ஆக்ஷன் திரைப்டமாக கொடுக்க  நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன், ஒரு நிமிடத்த்தில் யோசிக்காமல் எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  ஒருவர் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

நடிகர்கள் : மாஸ்டர் மகேந்திரன்,, ஜி.எம் சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல்

இசை : பாலமுரளி பாலு

இயக்கம் : பிரசாந்த் நாகராஜன்,

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

Comments

Popular posts from this blog