Posts

Showing posts from May, 2023
Image
*திருநெல்வேலியில் நடைபெற்ற 'அறமுடைத்த கொம்பு' இசை வெளியீடு.!* திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் 'நெல்லை கீதம்' ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய 'அறமுடைத்த கொம்பு' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட  பிரபல பின்னணி  பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் அறமுடைத்த கொம்பு திரைப்படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன்,  கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா  மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும்ந பங்கு பெற்றனர்.
Image
கழுவேத்தி மூர்க்கன்’ - விமர்சனம ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள  தெக்குப்பட்டி கிராமத்தில் மேல்  சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதற்கிடையே சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக அருள்நிதி நிற்கிறார் சாதி வெறி மற்றும் பதவி வெறி பிடித்த அருள்நிதியின் தந்தை யார் கண்ணனுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் தன் மகன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்காமல் இருக்கிறது. இந்த சூழலில், அந்த ஊரில் தன்னுடைய சாதி அரசியல் பலத்தை காண்பிக்க திட்டம் தீட்டுகிறார் அரசியல்வாதிகாக  வரும் ராஜசிம்மன். அப்போது ஏற்படும் பிரச்சனையில், ராஜசிம்மனின் பகைக்கு உள்ளாகிறார் சந்தோஷ். இந்த சூழலால் ராஜசிம்மனின் கட்சி பதவியும் பறிக்கப்படுகிறது.. இதனால், சூழ்ச்சி செய்து சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்கிறார். இந்தப்பழி அருள்நிதி மீது விழுகிறது.  இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை அருள்நிதி பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ’கழுவேத்தி மூர்க்கன்’
Image
நினைவிருக்கா --------------------------------- ( திரை வடிவில் ஆல்பம் பாடல் ) நினைவிருக்கா அன்பே நினைவிருக்கா இடமிருக்கா நெஞ்சில் இடம் இருக்கா... என்ற  பாடல் காட்சி திரைப்பட வடிவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் நிஜய், கதாநாயகி ஜாராவை விரும்புகிறான். ஆனால் அந்தப் பெண் அவனை விரும்ப முடியாத சூழ்நிலை. காரணம் என்னவெனில் தன்னுடைய பெற்றோர்கள் ஊனமுற்றவர்கள் என்பதால்  அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள் என்பதை நாயகன் நிஜய் உணர்ந்து கொள்கிறான். அதே நேரத்தில் மற்றொரு பெண்ணான அன்வித்தாவின மானத்தை காப்பாற்றுகிறான்.அதன் காரணமாக அன்வித்தாவிற்கு நாயகன் நிஜய் மீது காதல் கொல்கிறாள். இதை அறிந்து நிஜய் தான் நேசித்த அவள் கிடைக்கவில்லை, எனவே தன்னை நேசித்த அவளை நிஜய் ஏற்றுக் கொள்கிறான் இந்த கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு பாடல் காட்சியில் ஒரு கதையை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வலைதளத்தில் வெளிவந்து பல்வேறு ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாயகனாக நிஜய் நடிக்க நாயகிகளாக ஜாரா, அன்வித்தா நடித்திருக்கின்றனர். இந
Image
*நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது* குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’  வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது.  அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது.  இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.  பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன.  வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்
Image
1982 அன்பரசின்  காதல் - விமர்சனம்  கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞன் ஆஷிக் மெர்லினும் மலையாள பெண் சந்தனாவும்  ஒன்றாக  கல்லூரியில் படித்து வருகிறார்கள்.  சந்தனா மீது அஷிக் மெர்லினுக்கு காதல் மலர்கிறது.. ஆனாலும் மூன்று வருடமாக காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறார். ஒருநாள் சந்தனா -  ஆஷிக்கை கேரளாவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல சொல்கிறார்  மறுநாள் பைக்கில் அழைத்து செல்ல வழியில் பைக் பழுதாகிறது. 3  பேர் கொண்ட குப்பாளிடம் ஆஷிக் - சந்தனா மாட்டிக் கொள்கிறார்கள் அந்த வழியாகச்செல்லும் உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து அங்கிருந்து  தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். இறுதியில் உல்லாஷ்  ஆஷிக் - சந்தனா துரத்துவதற்கான காரணம் என்ன? என்பதே  ’1982 அன்பரசின் காதல்’  -  படத்தின் கதை. நாயகன் அன்பரசுவாக நாயகன்  ஆஷிக் மெர்லின்  முதல் படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தன காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் காதலியை காப்பாற்ற தன உ
Image
*மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!* திருச்சூர் நகரின்  மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு,  முதல் ஷாட்டுடன் மிக  இனிமையான நிகழ்வாக துவங்கியது.  "அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.  இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான  ஆளுமையாக விளங்கும்  நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன்  விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும்  இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகி
Image
யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - விமர்சனம் இலங்கை உள்நாட்டுப் பேரினால் அனாதையான  சிறுவன் புனிதன் (விஜய்சேதுபதி)  பாதிரியார் (ராஜேஷிடம்  வந்து சேர்கிறான்  லண்டன் இசை பள்ளியில் சேர்ந்து இசையை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், லண்டனுக்கு செல்லும் வழியில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் சிறுவன் சிறையில் இருந்து இளைஞனாக வெளியே வருகிறான்.அங்கிருந்து கள்ளத் தோணி வழியாக கேராளவுக்கு செல்கிறான்,  கேரளாவில் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார்.  கடை முதலாலீயின் உதவியுடன்  இசையை முறையாக  கற்றுக் கொள்கிறார். லண்டனில் நடக்கும்  இசைப் போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் விஜய்சேதுபதி பல்வேறு முயற்சிகள் செய்து அங்கே செல்ல முயலும் போது அவருக்கான அடையாளம் கிடைக்கவில்லை  ஒரு கட்டத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்துக்கு வரும்போது அவரை போலீஸ் கைது செய்கிறது  அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும்  மகிழ்திருமேனி, விஜய்சேதுபதியை  கொல்ல நினைக்கிறார். இறுதியில் மகிழ் திருமேனி எதற்காக விஜய்சேதுபதியை கொள்ள நினைக்கிறார்? விஜய்சேதுபதி   லண்டனில் நடக்கும்  இ
Image
*‘குட் நைட்’ படத்தின் நன்றி தெ ரிவிக்கும் விழா* *தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்* *நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் -  இயக்குநர் பாலாஜி சக்திவேல்* *பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக்* எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான்  மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரி
Image
இராவண கோட்டம்’  - விமர்சனம் கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில்  விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, பிரபு, இளவரசு, ஆனந்தி, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், பிஎல்.தேனப்பன், சுஜாதா சிவகுமார்,  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இராவண கோட்டம்’ ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்   மேலத்தெரு ஊர்த்தலைவர் பிரபு  இவர்  சொல்லுக்கு  ஊரே கட்டுப்பட்டு  நடக்கிறது  இதில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த  சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.அரசியல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களை பிரிக்க அரசியல்வாதிகள் சதி திட்டம் போடுகிறார்கள்.   சென்னையில் இருந்து  ஊர் திருவிழாவுக்காக வரும் ஆனந்தி  சாந்தனுவை காதலிக்கிறார். இது தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பகை மொத்த கிராமத்தையே பற்ற வைக்கும் த
Image
கஸ்டடி’  - விமர்சனம் ஆந்திரா, ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்து ஒன்றில் பள்ளி குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும்  நாக சைதன்யா .அதே ஊரை சேர்ந்த கிரித்தி ஷெட்டியை காதலித்து வருகிறார், ஆனால் கிரித்தியின் குடும்பத்தினர் இதை விரும்பாமல்  பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வை க்க முயற்சிக்கின்றனர். நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைக்கிறார். பிறகு சிபிஐ அதிகாரியான சம்பத், ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து அழைத்து செல்லும் உண்மையை நாக சைதன்யா தெரிந்துக் கொள்கிறார் இதன் பின்னர் சிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை கொலை செய்ய  முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமாரை அனுப்புகிறார். இறுதியில்  நாக சைதன்யா அரவிந்த்சாமியை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே ’கஸ்டடி’   படத்தின் கதை. நாயகன் நாக சைத்தன்யா, தனது நடிப்பின் மூலம் நேர்
Image
ஃபர்ஹானா’  - விமர்சனம் சென்னையில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றும் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த  ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவர்  ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் சரியாக போவாததால் குடும்ப வருமையை போக்க தனது கணவர் அனுமதியுடன் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். தோழி ஒருவர் முலம் கால் செண்டர் ஒன்றில் வேலைக்கு சேரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப பொருளாதார நிலை ஓரளவு உயர தொடங்குகிறது. இதற்கிடையே அவருடைய  கைக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது நிறுவனத்தில் மூன்று மடங்கு ஊக்கத்தொகை கிடைக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார்.  வேறு பிரிவிற்கு மாறி பிறகு ஐஸ்வர்யா தன்னையும் அறியாமல் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் . இறுதியில் அந்த பிரச்சனை என்ன ? அதிலிருந்து  மீண்டு வந்தாரா? இல்லையா?  என்பதே ‘ஃபர்ஹானா’-  படத்தின் கதை. பர்ஹானா என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருவித தயக்கத்தோடே வேலைக்கு ஒத்துக்கொள்வது
Image
’குட் நைட்’  - விமர்சனம் நாசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன், தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன்  இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் பாலாஜி சக்திவேல், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’குட் நைட்’ குறட்டையால் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் ’குட் நைட்’ படத்தின் கதை. விதவை அம்மா, ஒரு அக்கா ஒரு தங்கை அக்கா கணவன் ரமேஷ் திலக் ஆகியோருடன்  மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருகிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்  நாயகன்  மணிகண்டன்  இவருக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.  இவரது குறட்டைதான் இவருக்குப் பிரச்சினை. அலுவலகத்திலேயே “மோட்டார் மோகன்” என பட்டப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இவர் தூங்கப்போகிறார் என்றாலே குடும்பத்தினர் அலறுகிறார்கள். குறட்டை பிரச்சனையால் தான் காதலித்த பெண்ணும் வேண்டாம் என சொல்ல மன அழுத்தத்திற்கு செல்கிறான். நாயகி மீதா ரகுநாத்தை சந்திக்கும் மணிகண்டன் அவர் மீது காதல் கொள்கிறார்.  அதன் பின் அவன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் தன் தந்தை, தாய் என