ஃபர்ஹானா’  - விமர்சனம்

சென்னையில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றும் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த  ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவர்  ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் சரியாக போவாததால் குடும்ப வருமையை போக்க தனது கணவர் அனுமதியுடன் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
தோழி ஒருவர் முலம் கால் செண்டர் ஒன்றில் வேலைக்கு சேரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப பொருளாதார நிலை ஓரளவு உயர தொடங்குகிறது. இதற்கிடையே அவருடைய  கைக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது நிறுவனத்தில் மூன்று மடங்கு ஊக்கத்தொகை கிடைக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார்.  வேறு பிரிவிற்கு மாறி பிறகு ஐஸ்வர்யா தன்னையும் அறியாமல் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் . இறுதியில் அந்த பிரச்சனை என்ன ? அதிலிருந்து  மீண்டு வந்தாரா? இல்லையா?  என்பதே ‘ஃபர்ஹானா’-  படத்தின் கதை.

பர்ஹானா என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருவித தயக்கத்தோடே வேலைக்கு ஒத்துக்கொள்வது, மர்ம நபர் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக லயிப்பது, வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ என பதற்றப்படுவது அற்புத நடிப்பு.
ஐஸ்வர்யாவின் கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் தோற்றத்தில் மட்டுமல்ல  பேசுகிற பேச்சாலும் உடல் மொழியாலும் அச்சு அசலாக இஸ்லாமிய மனிதராக மாறி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா மற்றும் அனு மோல் இருவரும் தங்களுக்கு கொடுத்த காதப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர்.இயக்குனர்  செல்வ ராகவன்  யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டியின் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியான நடிப்பு தனி சிறப்பு.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது., பின்னணி இசை கதையோடு பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கதைக்கு ஏற்றபடி காட்சிகளை அற்புதமாக மட்டமாக்கியிருக்கிறார். மிக குறுகிய இடங்களில் பல காட்சிகளை அழகாக காட்சி படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்  
இயக்குநர் நெல்சன் ஒரு புதுமையான கதை களத்தினை தேர்வு செய்து மிக திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக திரைக்கதையை நகர்த்தி சென்ற விதம் நம்மை சீட்டின் நுனிக்கே நகர்த்தி செல்கிறார். டெலிபோன் வழியே நட்பை வளர்க்கும் அந்த அந்தரங்க உலகத்தை இப்படத்தில் இயக்குநர் சரியாகக் காட்டியிருக்கிறார்

Comments

Popular posts from this blog