’குட் நைட்’  - விமர்சனம்
நாசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன், தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன்  இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் பாலாஜி சக்திவேல், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’குட் நைட்’

குறட்டையால் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் ’குட் நைட்’ படத்தின் கதை.
விதவை அம்மா, ஒரு அக்கா ஒரு தங்கை அக்கா கணவன் ரமேஷ் திலக் ஆகியோருடன்  மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருகிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்  நாயகன்  மணிகண்டன்  இவருக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.  இவரது குறட்டைதான் இவருக்குப் பிரச்சினை. அலுவலகத்திலேயே “மோட்டார் மோகன்” என பட்டப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இவர் தூங்கப்போகிறார் என்றாலே குடும்பத்தினர் அலறுகிறார்கள். குறட்டை பிரச்சனையால் தான் காதலித்த பெண்ணும் வேண்டாம் என சொல்ல மன அழுத்தத்திற்கு செல்கிறான்.
நாயகி மீதா ரகுநாத்தை சந்திக்கும் மணிகண்டன் அவர் மீது காதல் கொள்கிறார்.  அதன் பின் அவன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் தன் தந்தை, தாய் என பலரின் மரணத்திற்கு காரணம் தன்னுடைய ராசிதான் என நாயகி நினைக்கிறாள். இருந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் நாயகனின் குறட்டையால் நாயகி தூக்காமல் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

தன்னால் மனைவிக்கு பாதிக்கப்படுகிறாளே  என குறட்டையை நிறுத்த ஏதேதோ முயற்சி செய்கிறார் நாயகன். மணிகண்டன்  அது நிறைவேறாமல் போகவே ஏகத்துக்கு டென்சன் ஆகிறார். இதனால் இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’குட் நைட்’  படத்தின் கதை

நாயகன் மோகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் படத்தை முழுவதும் தாங்கி பிடித்து இருக்கிறார். உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் மணிகண்டன், அலுவலகம் மற்றும் குடும்ப நபர்களிடம் குறட்டையால் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார்

நாயகியாக நடித்திருக்கும் வரும் மீதா அழகான நடிப்பை கொடுத்துள்ளார். பல இடங்களில் நம் குடும்பத்து பெண் என்ற எண்ணம் தோன்றும்படி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவனின் குறட்டையை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து, அதன் துயரை கண்களிலேயே காட்டுகிறார்.

மணி கண்டனின் மாமாவாக நடித்துள்ள ரமேஷ் திலக் காமெடியில் ஒரு பக்கம் கலக்கினாலும், மற்றொரு பக்கம் குடும்பத்தை அரவணைத்துக்கொண்டு செல்வதிலும், மனைவியிடம் அடங்கிப்போகும் இடத்திலும் நம்மை ரசிக்க வைக்கிறார்.

தாத்தா வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பாட்டியாக நடித்திருக்கும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரைச்சேல் ரெபாகா, ஐடி நிறுவனத்தின் மேலாளராக நடித்திருக்கும் பக்ஸ், மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் உமா ராமச்சந்திரன் நடித்த அனைவரும்
சிறப்பாந நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

ஷீன் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் சேர்ந்து பயணித்திருக்கிறது.  ஜெயந்த்சேதுமாதவனின் ஒளிப்பதிவு குறைந்த வசதியிலும் நிறைவாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் விநாயகர் சந்திரசேகர், வாழ்வில் நடக்கும் சாதாரண விசயத்தை அற்புதமாக இயல்பாக சொல்லி இருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் அது படத்தின் கதை தான். நல்ல கதையை ரசிகர்கள் கண்டிப்பாக கைவிட மாட்டார்கள்.


Comments

Popular posts from this blog