யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - விமர்சனம்
இலங்கை உள்நாட்டுப் பேரினால் அனாதையான  சிறுவன் புனிதன் (விஜய்சேதுபதி)  பாதிரியார் (ராஜேஷிடம்  வந்து சேர்கிறான்  லண்டன் இசை பள்ளியில் சேர்ந்து இசையை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், லண்டனுக்கு செல்லும் வழியில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் சிறுவன் சிறையில் இருந்து இளைஞனாக வெளியே வருகிறான்.அங்கிருந்து கள்ளத் தோணி வழியாக கேராளவுக்கு செல்கிறான்,  கேரளாவில் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார்.  கடை முதலாலீயின் உதவியுடன்  இசையை முறையாக  கற்றுக் கொள்கிறார்.
லண்டனில் நடக்கும்  இசைப் போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் விஜய்சேதுபதி பல்வேறு முயற்சிகள் செய்து அங்கே செல்ல முயலும் போது அவருக்கான அடையாளம் கிடைக்கவில்லை  ஒரு கட்டத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்துக்கு வரும்போது அவரை போலீஸ் கைது செய்கிறது  அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும்  மகிழ்திருமேனி, விஜய்சேதுபதியை  கொல்ல நினைக்கிறார். இறுதியில் மகிழ் திருமேனி எதற்காக விஜய்சேதுபதியை கொள்ள நினைக்கிறார்? விஜய்சேதுபதி   லண்டனில் நடக்கும்  இசைப் போட்டியில் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பதே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
நாயகன் விஜய் சேதுபதி  எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். புனிதன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற  இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.  தன்னிடம் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்துள்ளார் கனிகா, மேகா ஆகாஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார்கள்.

மகிழ்திருமேனி போலீஸ் அதிகாரியாக வருகிறார் அவர் அலட்டலின்றி, கண்களாலேயே நடிக்கிறார் மறைந்த நடிகர் விவேக் பாதிரியார் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வித்யா, சின்னிஜெயந்த் ஆகியோர் நடிப்பு  கவனிக்க வைக்கிறது. மோகன்ராஜா, கரு.பழனியப்பன், ராஜேஷ்,  தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, 
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் , பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.  வெற்றிவேல் மகேந்திரன்  ஒளிப்பதிவில் ,காட்சிகள் வழியை பாத்திரங்களின் கனத்தையும் பதிவு  செய்திருக்கிறார்.

 எந்தப் பக்கமும் சொந்தமில்லாமல் எந்த நாடும் சொந்தம் இல்லாமல் நிற்கும் ஓர் அகதியின் நிலையை ,அடையாளமின்மை தரும் மனத்தவிப்பை விஜய் சேதுபதியின் பாத்திரத்தின் மூலம் அழகாக உணர்த்தி உள்ளார் இயக்குநர். இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டிய இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோகாந்துக்கு பாராட்டுக்கள்




Comments

Popular posts from this blog