இராவண கோட்டம்’  - விமர்சனம்
கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில்  விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, பிரபு, இளவரசு, ஆனந்தி, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், பிஎல்.தேனப்பன், சுஜாதா சிவகுமார்,  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இராவண கோட்டம்’

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்   மேலத்தெரு ஊர்த்தலைவர் பிரபு  இவர்  சொல்லுக்கு  ஊரே கட்டுப்பட்டு  நடக்கிறது  இதில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த  சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.அரசியல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களை பிரிக்க அரசியல்வாதிகள் சதி திட்டம் போடுகிறார்கள்.  

சென்னையில் இருந்து  ஊர் திருவிழாவுக்காக வரும் ஆனந்தி  சாந்தனுவை காதலிக்கிறார். இது தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பகை மொத்த கிராமத்தையே பற்ற வைக்கும் தீயாக மாற, இறுதியில் அரசியல்வாதிகளின் சதி திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே  ’இராவண கோட்டம்’  படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, ஆக்ரோஷம் கலந்த யதார்த்த நடிப்பில் தனித்து நிற்கிறார்.. நட்பு, காதல், செண்டிமெண்ட்  என நடிப்பில் பளிச்சிடுகிறார். இராமநாதபுர மாவட்ட வட்டார தமிழ் பேசி நடித்திருக்கும் ஷாந்தனு கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ’கயல்’ ஆனந்தி,தனது புன்னகை பூக்கும் முகத்துடன் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் துறுதுறு பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து  விடுகிறார்.  அறிமுக நடிகர் சஞ்சய் சரவணன், முக்கிய வேடத்தில் நடித்திருப்பது முதல் முறை என்றாலும் அதை முகத்தில் காட்டாமல் நடித்திருக்கிறார்.
 ஊர்த்தலைவராக  வரும் பிரபு .அவரது நண்பன் சித்திரவேலுவாக வரும் இளவரசும்  ஆகியோர்  தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்கள்.  சாந்தனுவின் அக்காவாக வரும் தீபா சங்கரும், ஆனந்தியின் அம்மாவாக வரும் சுஜாதா சிவகுமாரும், இயல்பான கிராமத்து பெண்களாக அடையாளம் தெரிகிறார்கள். மாவட்ட ஆட்சியராக ஷாஜி அமைச்சர் தேனப்பன், எம்.எல்.ஏ. அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,, பின்னணி இசை படு மோசமாகவும் இருக்கிறது. கருவேல மரங்கள் சூழ்ந்த நிலப்பரப்பினை அழகாக காட்சி படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்.
சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா, அரசியல், காதல், நட்பு என படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். நிஜத்தில் பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் கருவேல மர ஒழிப்பு திட்டத்தின் சட்டரீதியான சிக்கல்களையும் இதில் பதிவு செய்து இருக்கிறார்  இயக்குனர். கதாபத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
 -

Comments

Popular posts from this blog