Posts

Showing posts from February, 2023
Image
உலக அளவில் மாபெரும் குரல் தேர்வு திருவிழா! மேதைகளுக்குச் சமர்ப்பணம் : மாபெரும் குரல் தேர்வு! சாய்பாபா பற்றி  இந்தியாவின் 11  மொழிகளில் உருவாகும் இசை ஆல்பம்! இசை மேதைகள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் மற்றும் பத்ம விபூஷன் Dr. எஸ்பி பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு சமர்ப்பணம்: பிரம்மாண்ட ஏற்பாடு! இசைஞானம் ஜாதி பார்த்து வருவதில்லை : இயக்குநர் பேரரசு பேச்சு! 'மேதைகளுக்குச் சமர்ப்பணம்'   *Tribute to the Legends*   என்கிற 'மாபெரும் குரல் தேடும்' செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 'நெஞ்சில் நீயே ஸாயி' என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின்  11 மொழிகளில் வெளியாகவுள்ளது.  ஏற்கெனவே எஸ்.பி. பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடி Sony Music மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு மீண்டும் வெளியீடு..  தமிழ்நாட்டில் இருந்து தேர்வில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் குரலும்  SPB அவர்களின் குரலும் இணைந்து இசைத் தொகுப்பு மீண்டும் வெளியிடப்படும். மற்ற 10 மொழிகளைப் பொறுத்தவரை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இணையம் வழியே  போட்டியாளர்கள் பங்கேற்க அவர்கள
Image
*நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்* *டீக்கடையில் உருவானதுதான் குடிமகான் படத்தின் கதை ; நடிகர் விஜய் சிவன்* *குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ; நடிகை கோமல் சர்மா*  *ஆண்களும் பெண்களும் சமம் அல்ல  ; குடிமகான் விழாவில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு* *நிஜமாகவே மாடு வளர்த்து வாடிவாசலில் இறக்கிவிட்டுத்தான் வருகிறேன் ; ஆச்சர்யப்படுத்திய நடிகை ஷீலா ராஜ்குமார்* *மன அழுத்தத்திற்கு ஆளானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் ; கோமல் சர்மா கோரிக்கை* *குடிமகான் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் ; நடிகை ஷீலா ராஜ்குமார்* *நரேஷ் ஐயர் என்னுடைய வழிகாட்டி ; குடிமகான் விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் தனுஜ் மேனன்* சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள
Image
In Car  "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்  இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது…  "இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெ
Image
சிங்கள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - விமர்சனம் இன்ஜினியரிங் படித்து விட்டு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் நாயகன் சிவா  விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக, பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட மொபைல் போன்  ஒன்றை உருவாக்குகிறார்,  அந்த மொபைலுக்கு (மேகா ஆகாஷ்) சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார்  இந்த சிம்ரன் மொபைல் ஷாராவிடம் இருந்து தொலைந்துவிடுகிறது. அந்த  ஸ்மார்ட் போன் எப்படியோ சிவாவின் கைகளில் கிடைக்கிறது.  இதனையடுத்து சிவாவின் தேவைகளை சிம்ரன் பூர்த்தி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் சிம்ரன் சிவா மீது காதல் கொள்கிறாள்.  ஆனால் சிவாவுக்கு நாயகி அஞ்சு குரியன் மீது காதல் வருகிறது  இறுதியில் சிவா - அஞ்சு  இருவரின் காதல் ஒன்று கூடியதா? இல்லையா?  என்பதே  “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”  படத்தின் கதை. ஷங்கராக  நடித்திருக்கும் நாயகன் சிவா வழக்கம் போல் காமெடியில் கலக்கியிருக்கிறார்.இவரின்  இயல்பான நடிப்பு , ,உடல்மொழி, வசன உச்சரி
Image
‘குற்றம் புரிந்தால்’  - விமர்சனம்  நாயகன் ஆதிக் பாபு, மாமா எம்.எஸ்.பாஸ்கர் இவருடைய மகள்  நாயகி அர்ச்சனாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.ஆதிக் - அச்சனா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க  அர்ச்சனாவின் படிப்பு முடிந்த உடன், ஆதிக் பாபுவிற்கு  திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். இந்நிலையில் திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் 3 பேரால்,மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கை சின்னாபின்னமாகிறது மாமாவையும், காதலியையும் பரிகொடுக்கும் நாயகன் ஆதிக் பாபு, சட்டத்தின் மூலம் அந்த 3  பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் காவல் துறையும், மருத்துவத்துறையும் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுகிறது.  இறுதியில் நாயகன் ஆதிக் 3 குற்றவாளிகளுக்கு கொடுத்த தன்னடனை என்ன? என்பதே  ‘குற்றம் புரிந்தால்  படத்தின்கதை. அறிமுக நடிகர் ஆதிக் பாபு முதல் படம் போல இல்லாமல் ஆக்ஷன்,,காதல்,,செண்டிமெண்ட்  என  அனைத்திலும் தனது  திறமையை  நிரூபித்து காட்டியிருக்கிறார். நாயகி அர்ச்சனா கொடுத்த வேலையை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் கதை நகர்விற்கு மையப்புள்ளியாக இருக
Image
ஓம் வெள்ளிமலை’  -  விமர்சனம் வெள்ளிமலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அங்கு சித்த மருத்துவ வைத்தியராக இருக்கும் சூப்பர் குட் சுப்ரமணி  மகள்  அஞ்சு  கிருஷ்ணாவுடன் வசித்து வருகிறார். அக்கிராமத்தில் வசிக்கும் எவரும், சித்த மருத்துவத்தின் அருமையை அறியாமல் மருந்தை கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் சகித்துக்கொள்ளும் சுப்பிரமணி என்றாவது ஒரு நாள் மக்கள் தனது  வைத்தியத்தின் மதிப்பை புரிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஊரில் தனது வைத்தியத்தை தொடர்கிறார். அதே கிராமத்திற்கு திடீரென ஒரு விதமான தோல்  அரிப்பு நோய் அனைவருக்கும் பரவுகிறது. மக்கள் தோல் நோய் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துவிடுகிறார். இதனால், ஒட்டு மொத்த கிராம மக்களும் தங்களை காப்பாற்றுமாறு வைத்தியர் சுப்பிரமணியிடம் தஞ்சம் அடைகிறார்கள். இறுதியில் வைத்தியர் சுப்பிரமணியன் மக்களை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே  ’ஓம் வெள்ளிமலை’  படத்தின் கதை. கதையின் நாயகனாக நடித
Image
*'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *செயற்கை நுண்ணறிவை பற்றிய சிந்தனை கொண்ட படைப்பு தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்- டாக்டர் பிரபு திலக்* *லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் - தயாரிப்பாளர் குமார்* ''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' திரைப்படம் உருவாகி இருக்கிறது' என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு தி லக் தெரிவித்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன
Image
“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!  எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "அரியவன்". மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்  கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது…  இப்படத்தில் வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை, ஆனால் இந்தக்கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்பது தான் உண்மை. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்ட
Image
'பலாப்பழம்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்! தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான 'தமிழ் தேசிய மாடல்' மன்சூர் அலிகான்! மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு"! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!  'சரக்கு' படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்! மன்சூர் அலிகானின் "சரக்கு"! இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின்,  மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்! @GovindarajPro
Image
*வேகமாக வளர்ந்து வரும் 'எல். ஜி. எம்'* *விரைவான படப்பிடிப்பில் 'எல். ஜி. எம்'* தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று  வருகிறது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,'' எல். ஜி. எம

p

Image
“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!  Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்  இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது.., இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.  இயக்குநர் பேரரசு பேசியதாவது.., “இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு
Image
டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்  !  தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும்,  முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில்,  உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம்.   இப்படத்தின்  படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள,  எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.  அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக  இப்படத்தை உருவாக்குகிறார்.  உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  கிரமாத்து பின்னணியில், மாறுபட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இப்படத்தில் நாயகனாக தொப்பி  படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். நாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு கா
Image
வாத்தி’ விமர்சனம் 1990களில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளை காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரசுப் பள்ளி lமாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்த தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை   அனுப்புவதாக  அனுமதி பெற்று மிக மோசமான ஆசிரியர்களை அனுப்பி மேலும் அரசுப் பள்ளிகளை பலவீனமாக்கி அதை தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக்க முயல்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர்  சமுத்ரக்கனி சமுத்திரகனியின் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனுஷ் ஆந்திரா -தமிழக எல்லையில் உள்ள  சோழவரம் என்ற ஊரில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்ற அனுப்புகிறார். அங்கு நாயகி சம்யுக்தாவை கண்டு காதல் வயப்படுகிறார். தனுஷ் பல முயற்சிகள் எடுத்து ஏழை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார். மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்கள். தனுஷ் செயல்பாட்டால் அதிர்ச்சியடையும்  சமுத்திரகனி  தனுஷை எச்சரிக்கிறார். அவரது எதிர்ப்பையும் மீறி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க நினைக்கும் தனுஷ் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ’வாத்தி’ படத்தின் கதை. நாயகனா