வாத்தி’ விமர்சனம்

1990களில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளை காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரசுப் பள்ளி lமாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்த தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை   அனுப்புவதாக  அனுமதி பெற்று மிக மோசமான ஆசிரியர்களை அனுப்பி மேலும் அரசுப் பள்ளிகளை பலவீனமாக்கி அதை தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக்க முயல்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர்  சமுத்ரக்கனி
சமுத்திரகனியின் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனுஷ் ஆந்திரா -தமிழக எல்லையில் உள்ள  சோழவரம் என்ற ஊரில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்ற அனுப்புகிறார். அங்கு நாயகி சம்யுக்தாவை கண்டு காதல் வயப்படுகிறார்.
தனுஷ் பல முயற்சிகள் எடுத்து ஏழை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார். மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்கள். தனுஷ் செயல்பாட்டால் அதிர்ச்சியடையும்  சமுத்திரகனி  தனுஷை எச்சரிக்கிறார். அவரது எதிர்ப்பையும் மீறி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க நினைக்கும் தனுஷ் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ’வாத்தி’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தனுஷ்  எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருத்தக்கூடியவர்  காதல், காமெடி, சென்டிமென்ட் என நடிப்பில் அசத்தியிருக்கிறார். மொத்த படத்தினையும் ஒத்த ஆளாக தாங்கி நிற்கிறார் தனுஷ். படிப்பு தான் மரியாதை தரும் என உணர்த்த தனுஷ் படும்பாடு அவர் மீது அதிக நேசத்தை ரசிகர்களிடம் விதைக்கிறது வாத்தியாக தனுஷ் ஆர்ப்பாட்டமாக இல்லாமல் பக்குவமாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா  அரசு பள்ளி ஆசிரியையாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகி சம்யுக்தாவுக்கு  இது முதல் தமிழ் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்களின் இதயத்தில்  இடம் பிடித்தார். வில்லனாக நடிப்பில் அசத்தி இருக்கிறார் சமுத்திரக்கனி

சாய் குமார், தணிகலபரணி, சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, ஷாரா, நரேன், ஹரிஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து  நடிகர்ளும்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.. ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவு 1990 காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் காட்சி அமைப்புகள் கதைக்கு ஏற்ப உள்ளது
இயக்குனர் வெங்கி அட்லூரி எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது.நல்ல கருத்துகளை . அரசு பள்ளியின் வெற்றி என்பது அரசு போடும் திட்டங்கள், தரும் நிதியிலும் மட்டும் இல்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர் மனதில்தான் உள்ளது என்பதை புரிய வைக்கிறார் இந்த  வாத்தி’


Comments

Popular posts from this blog