ஓம் வெள்ளிமலை’  -  விமர்சனம்


வெள்ளிமலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அங்கு சித்த மருத்துவ வைத்தியராக இருக்கும் சூப்பர் குட் சுப்ரமணி  மகள்  அஞ்சு  கிருஷ்ணாவுடன் வசித்து வருகிறார். அக்கிராமத்தில் வசிக்கும் எவரும், சித்த மருத்துவத்தின் அருமையை அறியாமல் மருந்தை கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் சகித்துக்கொள்ளும் சுப்பிரமணி என்றாவது ஒரு நாள் மக்கள் தனது  வைத்தியத்தின் மதிப்பை புரிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஊரில் தனது வைத்தியத்தை தொடர்கிறார்.

அதே கிராமத்திற்கு திடீரென ஒரு விதமான தோல்  அரிப்பு நோய் அனைவருக்கும் பரவுகிறது. மக்கள் தோல் நோய் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துவிடுகிறார். இதனால், ஒட்டு மொத்த கிராம மக்களும் தங்களை காப்பாற்றுமாறு வைத்தியர் சுப்பிரமணியிடம் தஞ்சம் அடைகிறார்கள். இறுதியில் வைத்தியர் சுப்பிரமணியன் மக்களை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே  ’ஓம் வெள்ளிமலை’  படத்தின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக மனதில் எடுத்துக் கொண்டு அதை கச்சிதமாக செய்துள்ளார். முற்றிலும் எதார்தமாந நடிப்பின் மூலம்   இந்த வெள்ளிமலை படம் இவரை தமிழ் மக்களுக்கு நன்றாக அடையாளம் காட்டும்

சூப்பர் குட் சுப்பிரமணியத்தின் மகளாக நடித்திருக்கும் நாயகி அஞ்சு கிருஷ்ணா ஒரு நிஜ மலை கிராம பெண் போலவே படத்தில் வாழ்ந்து இருக்கிறார். அஞ்சு கிருஷ்ணாவின் காதலராக  இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்

கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் , இயல்பாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்  ரகம் . பின்னணி இசை  கதைக்கு ஏற்றபடி பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். அழகிய மலைகளை கண்முன்னே நிறுத்தி கதைக்குள் நாமும் பயணப்பட வைக்கிறார்.

இயக்குனர் ஓம் விஜய் நல்ல கதையை தேர்வு செய்திருந்தாலும் அறிமுக நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், காட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பு  .  


Comments

Popular posts from this blog