‘குற்றம் புரிந்தால்’  - விமர்சனம்
 நாயகன் ஆதிக் பாபு, மாமா எம்.எஸ்.பாஸ்கர் இவருடைய மகள்  நாயகி அர்ச்சனாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.ஆதிக் - அச்சனா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க  அர்ச்சனாவின் படிப்பு முடிந்த உடன், ஆதிக் பாபுவிற்கு  திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். இந்நிலையில் திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் 3 பேரால்,மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கை சின்னாபின்னமாகிறது
மாமாவையும், காதலியையும் பரிகொடுக்கும் நாயகன் ஆதிக் பாபு, சட்டத்தின் மூலம் அந்த 3  பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் காவல் துறையும், மருத்துவத்துறையும் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுகிறது.  இறுதியில் நாயகன் ஆதிக் 3 குற்றவாளிகளுக்கு கொடுத்த தன்னடனை என்ன? என்பதே  ‘குற்றம் புரிந்தால்  படத்தின்கதை.

அறிமுக நடிகர் ஆதிக் பாபு முதல் படம் போல இல்லாமல் ஆக்ஷன்,,காதல்,,செண்டிமெண்ட்  என  அனைத்திலும் தனது  திறமையை  நிரூபித்து காட்டியிருக்கிறார். நாயகி அர்ச்சனா கொடுத்த வேலையை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் கதை நகர்விற்கு மையப்புள்ளியாக இருக்கிறார்.
நாயகியின் தந்தையாக  நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்  தனது  அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா, நேர்மையான காவல் அதிகாரியாக வந்து  அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.

அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

கே.கோகுல் ஒளிப்பதிவில் கதைக்கு ஏற்றபடி அனைத்து காட்சிகளும் இயல்பாக -படமாக்கியிருக்கிறார்.
பெரும்பாலான காட்சிகளை மக்கள் நிறைந்த பகுதிகளில் படமாக்கி, இருப்பது படத்திற்கு கூடுதல்  பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ், இசையில் பாடகள்  ரசிக்கும் விதத்தில் உள்ளது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் படம் சேர்த்திருக்கிறது.

நாயகியை கொன்றவர்களை நாயகன் பழிவாங்குவது  தான்  கதை என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இயக்குநர் டிஸ்னி 
படத்தில் சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

Comments

Popular posts from this blog