சிங்கள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - விமர்சனம்
இன்ஜினியரிங் படித்து விட்டு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் நாயகன் சிவா  விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக, பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட மொபைல் போன்  ஒன்றை உருவாக்குகிறார்,  அந்த மொபைலுக்கு (மேகா ஆகாஷ்) சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார்  இந்த சிம்ரன் மொபைல் ஷாராவிடம் இருந்து தொலைந்துவிடுகிறது.
அந்த  ஸ்மார்ட் போன் எப்படியோ சிவாவின் கைகளில் கிடைக்கிறது.  இதனையடுத்து சிவாவின் தேவைகளை சிம்ரன் பூர்த்தி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் சிம்ரன் சிவா மீது காதல் கொள்கிறாள்.  ஆனால் சிவாவுக்கு நாயகி அஞ்சு குரியன் மீது காதல் வருகிறது  இறுதியில் சிவா - அஞ்சு  இருவரின் காதல் ஒன்று கூடியதா? இல்லையா?  என்பதே  “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”  படத்தின் கதை.
ஷங்கராக  நடித்திருக்கும் நாயகன் சிவா வழக்கம் போல் காமெடியில் கலக்கியிருக்கிறார்.இவரின்  இயல்பான நடிப்பு , ,உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியன இந்தத் திரைக்கதைக்கும் காட்சியமைப்புகளுக்கும் சரியாகப் பொருந்தி சிரிக்க வைக்கின்றன.
சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் செல் போன் பாவையாக வருகிறார். திரையில் நடிப்பை வெளிப்படுத்த ஸ்கோப் இருக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் சிம்ரன் கதாப்பாத்திரத்தை மேகா ஆகாஷ் தேர்வு செய்திருப்பது பாராட்டப்படுகிறது.

சிவாவின் காதலியாக வரும் அஞ்சு குரியன்,அழகு தேவதையாக வந்து இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
சிவாவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபல பின்னணி பாடகர் மனோ போனில் ஜொள்ளுவிட்டு காதலிப் பதும் காதலுக்காக மதம் மாறுவதும் வயிற்றை பதம் பார்க்கும் காமெடியில் இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஷாரா, பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், திவ்யா கணேஷ், பாலா, கல்கி ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் சையில் பாடல்கள் கேட்ட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆர்தர்.ஏ.வில்சன்.ஒளிப்பதிவு 
 
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் ஷா பி என், வித்தியாசமான கதைக்களத்தை வைத்துக்கொண்டு ரசிகர்களைச் சிரிக்க வைப்பது  என்ற விதத்தில் படத்தை இயக்கி இருக்கிறார்.  படத்தில் என்னதான் பல லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அதனை விடுத்து படத்தை ரசிக்கவும், சிரிக்கவும் முடிகிறது. .


Comments

Popular posts from this blog