Posts

G5MEDIA

Image
*வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்'  திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.  இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,  சித்தாரா, பி. எல். தேனப்பன்,  லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்...
Image
: பீனிக்ஸ் MovieReview- விறுவிறுப்புடன் ஆக்ரோஷம் நிறைந்த பழி வாங்கும் ஆக்ஷன் அதிரடியில் ஈர்க்கும் | ரேட்டிங்: 3.5/5 : எம் எல் ஏ-வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்கிறார் சூர்யா சேதுபதி   17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் சீர்த்திருத்த சிறையில் அடைக்கிறார்கள். இதனையடுத்து இந்த வழக்கை  விசாரிக்க நியமிக்கப்படுகிறார் போலீஸ் உயர் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் இந்நிலையில் எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்‌ஷ்மி சரத்குமார், தனது ஆட்களை சிறைக்குள் அனுப்பி சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். அவர்களது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா விஜய்சேதுபதி.  இதனையடுத்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் சூர்யா விஜய்சேதுபதியை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய  எம் எல் ஏ-வின்  ஆட்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இறுதியில் சூர்யா  எம் எல் ஏ சம்பத்தை கொலை செயதற்கான காரணம் என்ன?    போலீஸ் உயர் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் சூர்யாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’பீனிக்ஸ்’ படத்தின் கதை. அறிமுக படத்திலேயே அதிரடி நாயகனாக வலம் வருகிறா...
Image
’பறந்து போ’ - விமர்சனம் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மிர்ச்சி சிவா இவரது மனைவி கிரேஸ் ஆண்டனி மற்றும் மகன் மிதுன் ரியானுடன் வாழ்ந்து வருகிறார். கடை ஒன்றை வைக்க என்று ஆசைப்படும் சிவா வீடு  வீடாக பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். துணிக்கடை வைத்திருக்கும் கிரேஸ் ஆண்டனி வேலை விஷயமாக கோயம்பத்தூர் செல்கிறார். மகனுக்கு கோடை விடுமுறை என்பதால் மகனை சிவா பார்த்து கொள்கிறார்.மகனுக்கு தேவையான அனைத்தையும் தன் சக்திக்கு மீறி செய்து கொடுக்கிறார். ஆனால் மகனோ குறும்பு செய்வதே வேலையாக வைத்திருக்கிறார். எப்போதும் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிவா இந்நிலையில் கடன் கொடுத்த ஒருவர் சிவாவை துரத்த மகனுடன் பைக்கில் நெடு தூரம் பயணிக்கிறார்கள். இறுதியில் மகனின் ஆசையை சிவா நிறைவேற்றினாரா? இல்லையா?  மகனுக்காக சிவா சிகரெட் பிடிப்பதை நிறுத்தினாரா? இல்லையா?  என்பதே ’பறந்து போ’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா எதார்த்தமான நடிப்பின் முலம் கவனம் பெறுகிறார். உடல் மொழி மற்றும் டைமிங் காமெடி ...
Image
*2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!* *பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!* *ZEE5 தளம், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், பிளாக்பஸ்டர் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “மாமன்” படத்தை, விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது.!!* ~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து  இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை,  ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது. ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்”  திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம்,  குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது.  இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி ந...
Image
’மார்கன்’  - விமர்சனம் சென்னையில் இளம் பெண் ஒருவர் மீது மர்ம மனிதர் விஷ ஊசி போட  உடல் முழுவதும் கருப்பாக மாறி அந்த பெண் இறந்துவிட பிணத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார்.  இதனையடுத்து இந்த வழக்கை போலீஸ் விசாரிக்கிறது. மும்பையில் வசிக்கும் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி இளம்பெண் மரண செய்தி குறித்து  செய்தித்தாள் மூலம் அறிய    அதிர்ச்சி அடைகிறார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து  விசாரிக்க சென்னை வருகிறார் விஜய் ஆண்டனி சென்னை போலீஸ் உயர்அதிகாரியான சமுத்திரக்கனி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க விஜய் ஆண்டனிக்கு அனுமதி வழங்குகிறார்.  விஜய் ஆண்டனி, தனக்கு  கிடைத்த தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அவரது விசித்திரமான செயல்கள் பல சந்தேகங்களை எழுப்புகிறது. மறுபக்கம் அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.  இறுதியில் உண்மையான கொலையாளி யார் ? அஜய் தீஷனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உண்டா? இல்லையா? உண்மையான கொலைகாரனை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’ம...
Image
லவ் மேரேஜ்’  - விமர்சனம் உசிலம்பட்டியில் வசிக்கும் நாயகன் விக்ரம் பிரபு  துணிக்கடை நடத்தி வருகிறார். வயது 33 கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்.  ஊரார் மற்றும் உறவினர்கள் எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இந்நிலையில் கோபி செட்டிபாளையத்தில்  பெண் ஒன்று  அமைய, அங்கு நிச்சயதார்த்தம் செய்வதற்காக விக்ரம் பிரபு தனது குடும்பத்தோடு செல்கிறார். சுஷ்மிதாவை கண்டதும் விக்ரம் பிரபுவிற்கு பிடித்து போக, உடனே திருமணத்திற்கு சரி சொல்லிவிடுகிறார்  நிச்சயம் முடித்து ஊருக்கு கிளம்பும் சமயத்தில் இவர்கள் வந்த  வேன் ரிப்பேர் ஆகிவிட, பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மறுநாள் ஊருக்கு கிளம்பு நினைக்கையில்  கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், மேலும் சில நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை குடும்பத்தார் தங்குகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் சுஷ்மிதாவுடன் பேசி பழக விக்ரம் பிரபு முயற்சிக்கிறார்.  கையோடு திருமணத்தையும் நடத்திவிடலாம் என்று இருவீட்டாரும் முடிவெடுக்க, அன்று, இரவோடு இரவாக சுஷ்மிதா வீட்டிலிருந்து ஓட்ட...
Image
’கண்ணப்பா’  -  விமர்சனம் வேடவர் இனத்தின் தலைவர் சரத்குமார் இவரது மகன் விஷ்ணு சிறு வயது முதலே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். சிறு வயதில், தனது நண்பனை நரபலி கொடுத்ததன் விளைவாக கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று கூறி வருகிறார். இந்நிலையில் பக்கத்து குடியில் வாழும் நாயகி  ப்ரீத்தி முகுந்தனை காதலிக்க அதன் விளைவாக  பெரிய பகையை சம்பாதிக்கும் விஷ்ணு மஞ்சுவை, ஊரில் இருந்து விலக்கி வைக்கிறார் சரத்குமார். இதனையடுத்து  வாயு லிங்கத்தை அபகரிக்க நடக்கும் போரில் அதை காப்பாற்ற சண்டையிடும் சரத்குமார் கொல்லப்படுகிறார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க விஷ்ணு மஞ்ச எதிரிகளுடன் சண்டை  இடுகிறார். இறுதியில் போரில் விஷ்ணு மஞ்ச்சு வெற்றி பெற்றாரா? இல்லையா? கடவுளே இல்லை என்று கூறும் விஷ்ணு எப்படி தீவிர சிவன் பக்தர் ஆனார் என்பதே  ’கண்ணப்பா’  படத்தின்கதை. தின்னன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்ச கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், வீரம் , கருணை என அனைத்திலும் சிறப்பான நட...