பிளாக் மெயில்’  - விமர்சனம்
கோயம்புத்தூரில் மருந்துகளை டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வருகிறார் நாயகன்  ஜி வி பிரகாஷ் இவரது காதலி  தேஜு அஸ்வினி  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வர  இருவரும் காதலிக்கிறார்கள்.
ஒருநாள் முத்துக்குமார் பார்சல் ஒன்றை ஜி வி பிரகாஷிடம்  கொடுத்து உடனே டெலிவரி செய்யுமாறு கூறுகிறார்.  அந்த பார்சலை வாகனத்தில்  வைத்து கொண்டு செல்ல  திடீர் என பார்சலுடன் வாகனம் காணாமல் போகிறது.

இதனையடுத்து முத்துக்குமார் ஜி.வி.யின் காதலி தேஜு அஸ்வினியை கடத்திச் செல்கிறார். காணாமல் போன பார்சல்   அல்லது 50 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு   தேஜுவை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார்.

மறுபக்கம் பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் இவரது  மனைவி பிந்துமாதவி இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பார்சலை தேடி ஜி.வி பல இடங்களில் அழைக்கிறார்.  ஒரு கட்டத்தில் லிங்காவை ஜி.வி சந்திக்க ஸ்ரீகாந்த் மகளை  கடத்தி வந்தால் 50 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்.

இதனையடுத்து ஊட்டிக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் காரில் செல்ல வழியில் காரியில் இருந்து குழந்தையை கடந்த ஜி.வி முயற்சி செய்கிறார். இறுதியில் ஜி.வி குழந்தையை கடத்தினாரா ?  இல்லையா? காணாமல் போன பார்சல் கிடைத்ததா? இல்லையா?  காதலி தேஜுவை முத்துக்குமாரிடம் இருந்து மீட்டாரா ? இல்லையா? என்பதே ‘பிளாக் மெயில்’  படத்தின் மீதிக்கதை.

நாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் இயல்பான ண்டப்பின் மூலம் கவர்கிறார். காதலியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி, குழந்தையை காப்பாற்ற எடுக்கும் முயற்சி , பார்த்தலை தேடி அலைவது என படம் முழுவதும் ஒட்டிக் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

நாயகியாக வரும் தேஜு அஸ்வினி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் மகளை காபபற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

ஸ்ரீகாந்த் மனைவியாக நடித்திருக்கும் பிந்துமாதவி , வில்லனாக வரும் லிங்கா,முத்துக்குமார், நண்பராக வரும் ரமேஷ் திலக் அவரது மனைவியாக வரும் ஹரிப்பிரியா, ஷாஜி,ரெடின், ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் சந்திரிகா ரவி  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

 இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணிஇசை  படத்திற்கு  பலம் சேர்க்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,’கண்ணை நம்பாதே’ படங்களுக்குப் பின் இயக்குநர் மு.மாறன் குழந்தை கடத்தலை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்  இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
நடிகர்கள் : ஸ்ரீகாந்த்,பிந்து மாதவி தேஜு அஸ்வினி,லிங்கா , போஸ் வெங்கட், சோனியா,ஷாஜி,ரெடின் கிங்ஸ்லி
இசை : சாம் சிஎஸ்
இயக்கம் : மு.மாறன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

Comments

Popular posts from this blog