‘யோலோ’ - விமர்சனம்
நாயகன் தேவ் யோலோ’ என்று ஒரு யூடியூப் சேனல் முலம் பொதுமக்களை ப்ராங்க் வீடியோ செயது, அதை யூ டியூப்பில் ஒளிபரப்பி செய்து வருகிறார். படவா கோபி மகளான நாயகி தேவிகாவை பெண் பார்ப்தற்காக விஜே நிக்கி அக்கா மற்றும் மாமாவை அழைத்து செல்கிறார்.
நிக்கியின் அக்கா, தேவிகாவை பார்த்து உனக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூற தேவிகா உட்பட அனைவருக்குமே அதிர்ச்சி அடைகிறார்கள். தேவிகா நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று கூற, உனது கணவர் தேவ் என்றும், உங்களை இருவரையும் ஒன்றாக பார்த்திருப்பதாகவும் கூறிவிடுகிறார் நிக்கியின் அக்கா
ஒரு கட்டத்தில் தேவிகாவுக்கும் தேவுக்கும் திருமணம் ஆனதற்கான பதிவு ஆதாரம் இருப்பது தெரிகிறது.அது எப்படி சாத்தியம் என்று தேவிகா உண்மையை அறிய முயற்சி செய்கிறார். இறுதியில் தேவ், தேவிகா இருவருக்கும் திருமணம் நடந்த்து உண்மையா ? இல்லையா? இவர்களுக்கு தெரியாமல் திருமணம் நடப்பதற்கான காரணம் என்ன? என்பதே ‘யோலோ’ படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தேவ் முதல்ப்டம் போல இல்லாமல் எதிர்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி , நடனம் , ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும் கதிர் ஜோடி நடிப்பு ரசிக்க முடிகிறது.
கதாநாயகி வரும் தேவிகா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அப்பாவாக வரும் படவா கோபி நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது. விஜே நிக்கி ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பார்ப்பவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறார் . எது வருமோ அதை மட்டும் செய்தால் நல்ல இருக்கும் விஜே நிக்கி
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
பேய் படமா,காதல் படமா , சஸ்பென்ஸ் படமா எது என்று யூகிக்க முடியாத வகையில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் .சாம் திரைப்படத்தில் சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாக சொல்லாமல் படம் பார்ப்பவர்களை குழப்பி விடுகிறார் இயக்குனர்
நடிகர்கள் : தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார் ,படவா கோபி, விஜே நிக்கி,
இசை : சகிஷ்னா சேவியர்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
Comments
Post a Comment