‘மிராய் ’ - விமர்சனம்
மன்னர் அசோகர் கி.மு 232-ல் நடந்த கலிங்க போர் முடிவில் மனம் வருந்தி தன்னிடம் இருக்கும் சக்திகளை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 மாவீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல வருடங்ககள் கடந்த நிலையில் 9 வது  புத்தகம் வைத்திருக்கும்  ஸ்ரேயா சரண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

எதிர்காலத்த்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் வில்லன் மஞ்சு மனோஜ் அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார்.  இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதனை தடுப்பதற்கான தீர்வை தேடி  இமாச்சல் செல்கிறார்.
அங்கு  ஜெயராமை ( அகஸ்தியர் ) சந்திக்க இந்த பேரழிவை தடுக்க வேண்டும் என்றால் உன் மகனால் மட்டும்தான் முடியும் என்றும் அதற்காக நீ உன் மகனை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.  இதற்காக ஸ்ரேயா தன் மகனை அனாதையாக வாரணாசில் விட்டு செல்கிறார்.

24 வருங்களுக்கு  பிறகு நாயகி ரித்திகா , ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி  கண்டுபிடித்து மிராய் என்ற அற்புத சக்தி கொண்ட  ஆயுதத்தை அடைவதற்கான வழிமுறையை கூறுகிறார்.

இறுதியில் நாயகன் தேஜா சஜ்ஜா மிராயை கைப்பறினாரா? இல்லையா ? அம்மா ஸ்ரேயாவை சந்தித்தாரா / இல்லையா? வில்லன் மஞ்சு மனோஜிடம் இருந்து 9 புத்தகங்களை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதே ‘மிராய் ’  படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறுவென இருக்கும் இளைஞராக  நடித்து அசத்தியிருக்கிறார். அம்மா பாசம்,நட்பு, வீரம் என அனைத்திலும் தன திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

நாயகியாக வரும் ரித்திகா நாயகனுக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பெயருக்கு நாயகியாக இல்லாமல் பெயர் சொல்லும் அளவிற்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அம்மா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா சரண் தியாக குணம் கொண்டவராக அப்பாவி மக்களை காப்பாற்ற எதையும் செய்யக்கூடிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

வில்லனாக நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு மனோஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் அகஸ்தியராக வரும் ஜெயராம், ஜெகபதி பாபு, மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கௌரா ஹரி இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.  கார்த்திக் கட்டம்னேனி  ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கிறது.
9 புத்தகங்ககளில் இருக்கும் சக்திகளை அடைய நினைக்கும் வில்லனுக்கும் கதாநாயகனுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை மைய கருவாக வைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி  இத்திரைப்படத்தை ஃபேண்டசி கலந்து கொடுத்திருக்கிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  நிச்சயம் கவரும்  
 நடிகர்கள் : தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெயராம்
இசை : கௌரா ஹரி
இயக்கம் : கார்த்திக் கட்டம்னேனி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog