‘பாம்’ - விமர்சனம்
காளகம்மாய்பட்டி என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது . ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள்..அங்குள்ள மலை உச்சியில் மயில் நிற்பதும் அதன்பின் ஜோதி தெரிவதும் அதனை திருவிழாவாக எடுத்துக் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே அவர்களுக்குள் பகை வருகிறது.இயற்கைச் சீரழிவால் பெரிய கல் விழுந்து உடைந்து இரண்டாகி அந்த ஊரும் இரண்டாகச் சிதறுகிறது.
பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை ஒரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடுகிறது. காளக்கம்மாய்ப்பட்டி என்பது காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் பிரிகிறது இருபிரிவினருக்கும் மோதல் வெடித்துக் கொண்டே செல்கிறது.
வருடங்களும் உருண்டோடுகிறது. மேல் சாதியின் தலைவனாக சிங்கம்புலியும் கீழ் சாதியின் தலைவனாக கிச்சா ரவியும் இருக்கிறார்கள். இரு கிராமத்தையும் ஒன்றிணைக்க நண்பர்களான அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்துபோகிறார்.
அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது. இரண்டு ஊருக்கும் நடுவே இருக்கும் ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை தூக்கிச் சென்று வைக்கிறார் அர்ஜூன் தாஸ். காளி வெங்கட் ‘பாம்’ விட்டு, உடல் ஆட்டம் காணுவதால், ஊர் பூசாரி நம்ம ஊருக்கு சாமி வந்திருக்கிறது என்று கூறுகிறது.
இதனால், இரண்டு கிராமமும் இணைந்து காளி வெங்கட்டை சாமியாக வணங்குகிறது. இறுதியில் இரு கிராமமும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? மலை உச்சியில் மயில் , ஜோதி ஒளி தெரிந்ததா? இல்லாயா? என்பதே ‘பாம்’ படத்தின் கதை.
கதையின் நாயகனான அர்ஜூன் தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார் . எந்த இடத்திலும் பன்ச் வசனமே, அதிரடி சண்டையே இல்லாமல் அளவான நடிப்பின் முலம் அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
நாயகி ஷிவாத்மிகா அழகாக வந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நண்பராக வரும் காளி வெங்கட் அனுபவ நடிப்பின் முலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
நாசர், அபிராமி, சிங்கம்புலி, ராட்சசன் சரவணன். பாலசரவணன், விலங்கு ரவி, டி எஸ் கே என படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற நடிகர்களாக உள்ளனர்.
இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. P.M. ராஜ்குமார் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் சண்டையை மைய கருவாக வைத்து காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : அர்ஜுன் தாஸ் ,காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே ,
இசை : டி. இமான்
இயக்கம் : விஷால் வெங்கட்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
Comments
Post a Comment