ரத்னம் - விமர்சனம்



சிறுவயதில் தாயை பறிகொடுக்கும் விஷால் அங்கு உள்ள மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.  வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனியின் உயிரை காப்பாற்ற அன்றுமுதல் சமுத்திரக்கனியின் அரவணைப்பில் இருக்கிறார் விஷால்
நாயகி  ப்ரியா பவானி ஷங்கர்,   நீட் தேர்வு எழுத  வேலூர் வருகிறார். அவரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொலை செய்ய முயற்சிக்க அதைத் தடுத்து, ப்ரியாவை காப்பாற்றுகிறார் விஷால்.ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் துடிப்பதை அறிகிறார் விஷால்.

இதனையடுத்து ஆந்திரா ராயுடு பிரதர்ஸ்களால் தொடர்ந்து நாயகி பிரியா பவானி சங்கருக்கு பிரச்சனை வருகிறது. இறுதியில் நாயகன் விஷால் நாயகி பிரியா பவானி சங்கக்கரை காப்பாற்றினாரா? இல்லையா?  எனபதே   ’ரத்னம்’  படத்தின் கதை.
ரத்னம் கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் அதிரடி நாயகனாக பட்டையை கிளப்பியிருக்கிறார். விஷால் கடுமையாக உழைப்பு  அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.  சண்டையில் மட்டுமின்றி அம்மா மீது பாசம் காட்டுவதிலும்  இயல்பான நடிப்பை  வழங்கியிருக்கிறார்.முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார் விஷால்,

நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து  அசத்தியிருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  பிரியா பவானி சங்கர், தோற்றத்திலும் நடிப்பிலும் தன திறமையை வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார். வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனி வழக்கமான நடிப்பின் மூலம் அந்த  கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் சிரிப்பு வருகிறது.. அவரை தொடர்ந்து வரும் நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் அதிரடி வில்லனாக மிரட்டுகிறார்கள்.

விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் ஆகியோர் நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும்வகையில் இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை , பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 
தனது வழக்கமான பாணியிலான கதையை, அதிரடி சண்டைக்காட்சிகள் கலந்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை , அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் கலந்து ஒரு அதிரடி திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்..

சண்டைக் காட்சிகள், அதன் உழைப்பு பிரமாதம். விஷால் நடிப்பு, எமோசன், யோகிபாபு, பிரியாபவானிசங்கர் சீன் கள் ரசிக்க வைக்கிறது. 
அ ந்த சிங்கிள் டேக் பைட் செம.
நடிகர்கள் : விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன்,

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

இயக்கம் : ஹரி

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Comments

Popular posts from this blog