புதிய அரசியல் ஆன்மீக     
படமாக"அலப்பறை" 
உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான்.விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா?   என்பதே கதைகளம் என்கிறார் இயக்குனர்.

சி.எஸ்.கே சினிமா  தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.

கதையின்  நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான "யார்" கண்ணனின்  மகள் சாயாதேவி நடித்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன்,
 'யார்"கண்ணன், "நமோ"நாராயணன்,
அன்வர் அலிகான், கோதண்டம்,வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி,
வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு-
ஹரிதாஸ் 
இசை-அபி ஜோ ஜோ பாடல்கள்-நிகரன்

படத்தொகுப்பு-
கே.தணிகாசலம் 
கலை- மணிவர்மா 
நடனம் - ராதிகா 
சண்டை பயிற்சி-
ஆக்ஷன் பிரகாஷ்

மக்கள் தொடர்பு- வெங்கட் 
தயாரிப்பு மேற்பார்வை-
தேனி சங்கர் 

தயாரிப்பு-
சி.எஸ்.கே.சினிமா

வசனம் - ஜி.வி.பாலா

கதை  திரைக்கதை இயக்கம்-
சி.எஸ்.காளிதாசன்

படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

தேவலோக சுந்தரி மயக்கும் ராஜதந்திரி..., டும்மாங்கோலி சரக்கடிச்சா ஜாலி...என இரண்டு துள்ளலிசை பாடல்களும் ஓமை ஸ்வீட்டி பூவில் செய்த க்யூட்டி... எனும் மென்மையான பாடலும் கேட்கத்தூண்டும் பாடல்களாக உள்ளது.

இதன் படப்பிடிப்பு காரைக்குடி, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களில் இருகட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.இதன் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog