ஆக்ரமிப்பு
---------------------------------------------
(உப்பள விவசாயிகளின் வாழ்வியலை கூறுவது)
----------------------------------------------
                           
செல்வாக்கு மிகக        ஒருவன் தன் சொந்த தொழிலுக்காக உப்பளங்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ளும் அவன் நினைத்ததை எல்லாம் சாதிக்கிறான்.அப்படி
அவனிடம் சிக்கி தவிக்கும் மக்கள், நமக்கு ஒரு விடியல் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
எங்கிருந்தோ வந்த ஒருவன் மண்ணை
பறித்துகொண்டான்
பொறுத்தார்கள்,
பொன்னை எடுத்துக்கொண்டான் 
பொறுத்தார்கள்,
பெண்ணை தொட்டால்       விடுவார்ளா. ?
தன் மானம் காக்க
அவனை  வென்றார்களா?   
இவர்களின் நிலை என்ன? என்பதே கதை களம் என்கிறார் இயக்குனர் வான்யா.
வி-1 சினிமாஸ்  தயாரித்திருக்கும் இப்படத்தில் 
அழகு பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சுகன்யா  அறிமுகமாகி உள்ளார். தீபா சங்கர் குணச்சித்திர வடத்தில் நடிக்க வால்டர் வெற்றிவேல் நிர்மல் விக்ரம் வேதா,மாஸ்டர், வெந்து தணிந்தது காடு புகழ் விஜய் சத்யா, ரஞ்சன், சுமதி, குபேரர்,
 வதிலை வசந்தா,
வி.வி.ஈசு, முத்து சிற்பி, மணிவாசகம், துரைசிங்கம், சந்தோஷ் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு-
சாய் நந்தா 

இசை-ஏ.சி ஜான் பீட்டர்

பாடல்கள்- 
தமிழமுதன், வான்யா ,செய்முரசு, வதிலை முத்து சிற்பி

சண்டை பயிற்சி- ஏசுதாஸ் 

நடனம்-
வாசு நவதீபன் 

தயாரிப்பு- வி-1 சினிமாஸ்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம்-
வான்யா 

இதன் படப்பிடிப்பு வேதாரண்யம், கோடியக்கரை, அகஸ்தியன் பள்ளி,  தோப்புத்துறை,ஆதனூர் அண்டர் காடு,  செம்போடை ,புஷ்பவனம் ஆகிய கிராமங்களில் 59 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.
இப்படத்தில் நான்கு பாடல்களும், மூன்று
சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

நிறைவு கட்ட தொழிற்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

- வெங்கட் பி.ஆர்.ஓ

Comments

Popular posts from this blog