‘ரூபன்’ - விமர்சனம்
காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசித்து வரும் தமப்திகள் நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊர் மக்கள் அவர்களை அவமதிப்பதோடு, சுப நிகச்சிகளில் கலந்து கொள்ளவிடாமால்  ஒதுக்கி வைக்கிறார்கள்.காடுகளில் கிடைக்கும் தேனை  எடுக்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ககை நடத்தி வருகிறார்  நாயகன் விஜய் பிரசாத்
இந்நிலையில்,தேன் எடுக்க, காட்டுக்குச் செல்லும் நாயகன், அங்கு ஒரு கைக்குழந்தையை காண்கிறார். அந்த குழந்தையை எடுத்து வந்து தனது மனைவியிடம் தருகிறார். குழந்தை இல்லாத அந்த தம்பதி, குழந்தையை பாசத்துடன் வளர்க்கிறார்கள்.
இதற்கிடையில், காட்டில் விலங்குகளை வேட்டையாடும், வில்லன் கோஷ்டியினர் தாங்கள்  செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் நாயகனை தவறாகப் பார்க்கிறார்கள்.இந்த சூழலில், ஊர் மக்களில் சிலர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோடுகிறார்கள். அவர்களுடன் நாயகனும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார். ஆனால், ஊர் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், தன் மகன் மூலமாகவே மாலை போட்டு தனியாக சபரிமலை செல்ல தீர்மானிக்கிறார்.

அப்போது, காட்டுக்குள் சிலர் மர்மமான முறையில் இறந்துக்கிடக்க அவர்களை புலி கொன்றுவிட்டதாக நம்பும் வனத்துறையினர், கிராம மக்களின் சபரி மலை பயணத்திற்கு தடை விதிக்கிறார்கள்.ஆனால், புலி இருப்பதை மறுக்கும் கிராம மக்கள், இந்த மர்ம மரணங்களுக்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  இறுதியில் நாயகன் விஜய் பிரசாத் இந்த கொலை பழியில்  இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே ‘ரூபன்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன், எமோஷனல் என அனைத்திலும் இவரது நடிப்பு கவனம் பெறுகிறது. குழந்தைக்காக ஏங்குவதும் ஐய்யப்பன்  தீவிர பக்தனாகவும் எதார்த்த நாயகனாக வலம்  வருகிறார்.
நாயகியாக வரும் காயத்ரி ரெமா, கிராமத்து பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தையின்மை பிரச்சனையால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படும் காட்சிகளில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சார்லியின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கஞ்சா கருப்பு,ராமர்  உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களும் மீண்டும்   மீண்டும்  கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு கட்டு மற்றும் மலை அழகை அழகாக காட்டிபடுத்தியிருக்கிறார்.

சமுதாயத்திற்கு தேவையான ஒரு படத்தை  எழுதி இயக்கியிருக்கும் ஐயப்பன், அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்.


நடிகர்கள் : விஜய் பிரசாத், காயத்ரி ரெமா, சார்லி, கஞ்சா கருப்பு, ராமர்

இசை : அரவிந்த் பாபு

இயக்கம் : ஐயப்பன்

மக்கள் தொடர்பு : கார்த்திக்

Comments

Popular posts from this blog