சிறகன்’ - விமர்சனம்
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் நிருபர் ஒருவர்  கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.  இதே சமயம் தன்  மகனை காணாவில்லை என  தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும்  கொலை செய்யப்படுகிறார்கள். இந்த இரண்டு கொலைகளை நேரில் பார்த்த பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் வருகிறது.
இதையடுத்து, தொடர்  கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தற்கொலை செய்து கொண்ட தனது  தங்கையின் நினைவால் வாடுகிறார். இறுதியில்  சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கொலையாளி யார்? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன?  என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ’சிறகன்’ படத்தின் கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் கஜராஜ் கோமாவில் இருக்கும் தனது மகளின் நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் அப்பாவின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார்  சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் ஜிடி தொடர் கொலைகள் ஒரு பக்கம், இறந்த தங்கையின் நினைவு மறுபக்கம் என நடிப்பில் இரண்டையும் வேறுபடுத்திகாட்டியிருக்கிறார். ராணுவ வீரராக வரும் அனந்த் நாக் கதை நகர்விற்கு துணை நிற்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பொளஷி ஹிதாயா ஆசிரியரை, மாணவன் ஒருவன் தவறாக படமெடுத்து மிரட்டும்போது அந்த மாணவனுக்கு பாடம் புகட்டும் தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கர்ஷிதா ராம், பள்ளி மாணவராக நடித்திருக்கும் பாலாஜி, எம்.எல்.ஏவின் உதவியாளராக நடித்திருக்கும் பூவேந்தன், மாலிக், சானு என்று படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் .

இசையமைப்பாளர் ராம் கணேஷ்.கே இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை , பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தர் க்ரைம் திரில்லர் படத்திற்கு  ஏற்ப ஒளிப்பதிவு இருக்கிறது.

க்ரைம் திரில்லர் கதையை  மையமாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கிறார்  இயக்குநர் வெங்கடேஷ்வராஜ்.எஸ் படத்தின் முதல் பாதி  சற்று  குழப்பத்தை  ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதியில் அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் எதிர்பார்க்காத திருப்பங்கள் உருவாக்கி படத்தின் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம்,

இசை : ராம் கணேஷ்.கே

இயக்கம் : வெங்கடேஷ்வராஜ்.எஸ்

மக்கள் தொடர்பு : : மணவை புவன்

Comments

Popular posts from this blog