வல்லவன் வகுத்ததடா’ - விமர்சனம்
ஏடிஎம்  காவலாளியாக பணியாற்றும் அருள் டி. சங்கரின்  இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள்  சுவாதி மீனாட்சி  டாக்ஸி ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் இவர் பார்த்து வந்த வேலை பறி போகிறது.

சில மாதங்கள் கடந்த நிலையில் ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் அப்பா வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு..தந்தைக்குரிய கடமையை செய்ய, பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்குகிறார்.

அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்து ஏற்படுகிறது.  இவர் வாங்கி வந்த 2 லட்சம் காணாமல் போகிறது    சுவாதி மீனாட்சி அவரது தந்தை எடுத்து வந்த  2 லட்சம் காணவில்லை என காவல்  நிலையத்தில் புகார்  அளிக்கிறார்.

இவரது தந்தை உயிருக்கு ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இறுதியில் காணாமல் போன பணம் கிடைத்ததா? இல்லையா?  சுவாதி மீனாட்சி தந்தையின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே  ’வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை.
தே ஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் என் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் தேஜ்ராஜ் மற்றும் அவரது நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்கள்
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி  கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து கதை ஓட்டத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது.

எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும்  விநாயக் துரை, ஆறு கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி வரும் கதையை எவ்வித குழப்பம் ஏற்படாதவாறு  திரைக்கதையை நகர்த்தி  சென்றிருக்கிறார்.  ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா

இசை : சகிஷ்னா சேவியர்

இயக்கம் : விநாயக் துரை

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

Comments

Popular posts from this blog