கொலை தூரம் -   விமர்சனம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் கணவன் யோசிக்காமல் எடுக்கும் விபரீத முடிவு அவனது  வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை சொல்லும் திரைப்படம் ’கொலை தூரம்
இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக துபாய்க்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் யுவன் பிரபாகர் துபாயில் உடன் பணிபுரியும் நான்கு பேர் நண்பர்கள் ஆகிறார்கள் துபாயிலிருந்து 12 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வரும்  நாயகன் யுவன் பிரபாகர் தங்கை இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கிறார்

தங்கைகள் இருவரும் சேர்ந்து அண்ணனுக்கு நாயகி சமந்துவை திருமணம் செய்து வைக்கிறார்கள் அழகாக சென்று கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீச யுவனின் மனைவி சமந்து கடிதம்  எழுதி வைத்து காணாமல் போகிறார்

இதே வேளையில் துபாயில் வேலை செய்யும் நான்கு  நண்பர்களின் மனைவிகள் ஒருவருக்கு பின் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்கள் இந்த வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது  இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதை ’கொலை தூரம்  படத்தின் கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் யுவன் பிரபாகர் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தங்கைகள் மீது அதிகம் பாசம் கொண்டவராகவும் ஆண்களுக்கு துரோகம் செய்யம் பெண்களை அழிப்பவராகவும் நடித்திருக்கிறார்.  காதல்,சண்டை, எமோஷனல் என அனைத்தையும் சரியாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். 

நாயகியாக நடித்திருக்கும் சமந்து படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மற்றோரு நாயகியாக வரும் ,ஜெயா, அம்பானி சங்கர், ரஞ்சன், பெஞ்சமின், கராத்தே ராஜா, போண்டாமணி  என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் -இந்திரஜித் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.  செந்தில் மாறன் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து  திரைப்படத்தை உருவாக்கிய இருக்கிறார் இயக்குனர் பிரபு  படத்தின் முதல் பாதியில் மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி படத்தின் வேகத்தை கூட்டி இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் நன்றாக  இருந்த்திருக்கும்.

நடிகர்கள் : யுவன் பிரபாகர், சமந்து, ஜெயா, அம்பானி சங்கர், ரஞ்சன், பெஞ்சமின், கராத்தே ராஜா, பிரேம் ராஜ், பிரபு , போண்டாமணி

இசை : -இந்திரஜித்

இயக்கம் : பிரபு

மக்கள் தொடர்பு : வெங்கட்

Comments

Popular posts from this blog