பைரி’ -  விமர்சனம்
நாகர்கோவில் பகுதியில் வசிக்கு சையத் மஜித் புறா வளர்ப்பில் ஆர்வம் கொன்டவராக இருக்கிறார்.  ஆனால் இவரது அம்மாவிற்கு புறா வளர்ப்பது சுத்தமாக பிடிக்காது. சையத் மஜித் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து  வருகிறார். இவர் மீது முறைப்பெண் சரண்யாவுக்கு காதல்.. ஆனால் நாயகனுக்கு தன்னுடன் கூட படிக்கும் மேக்னா மீது காதல் கொள்கிறார்.

மறுபுறம் தன் தாத்தா அப்பாவை போல இவருக்கும் புறா பந்தயத்தின் மீது கொள்ளை ஆசை. இதனையடுத்து  புறா பந்தயத்தில் புறாக்களை பறக்க விட ஆசைப்படுகிறார். தனது பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம்.
இதே  ஊரில் புறா ரேஸுக்கான நாள் நெருங்குகிறது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா ரேஸில் கலந்து கொள்கிறார் சையத் மஜித். அதேசமயம், ஊரில் சில பல கொலைகளை செய்து பிரபல ரெளடியாக இருக்கும் வினு லாரன்ஸ் இவரும் புறா ரேஸில் கலந்து கொள்கிறார். புறா ரேஸில் சையத் மஜித்திற்கும் வினு லாரன்ஸ்க்கும் நேரடியாகவே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த மோதலில் வெற்றி பெற்றது யார்? என்பதே  ’பைரி’ படத்தின் கதை.
ராஜலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சையத் மஜித், கோபக்கார இளைஞராக இயல்பான நடிப்பை கொடுத்த்திருக்கிறார்.  வேகம், சுறுசுறுப்பு, எமோஷன்ஸ், காதல், செண்டிமெண்ட் என நாலாபுறமும் களமிறங்கி நடித்து அசத்தியிருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிரட்டலாக  இருக்கிறது.  நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி எதார்த்த நடிப்பு  மூலம் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறார்
நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ரமேஷ் பண்ணையாராக நடித்திருந்த ரமேஷ் ஆறுமுகம், நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  வினு லாரன்ஸ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது . பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நாகர்கோவில் அழகையும், அம்மக்களின் வாழ்ககையையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
புறா பந்தயத்தைப் பற்றியும் புறா பந்தயத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்  இயக்குனர் ஜான் கிளாடி நடிகர்களில் பெரும்பாலனவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிக்கும் விதத்தில் தேர்வு செய்திருக்கிறார்.
 

நடிகர்கள்: சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன்.

இசை: அருண் ராஜ்

இயக்கம்: ஜான் கிளாடி

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Comments

Popular posts from this blog