பாம்பாட்டம்’ - விமர்சனம்
ராணி மல்லிகா ஷெராவத் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ராணியை  பார்க்க வரும் ஜோதிடர்  உங்களுக்கு நாகத்தால் ஆபத்து இருக்கிறது.. அது உங்களை நாக பௌர்ணமிக்குள்  கொன்று விடும் கூறுகிறார். இதனால்  கோபமடையும் மல்லிகா ஷெராவத்  ஜோதிடரை சிறையில் அடைக்கிறார்.

அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் மல்லிகா ஷெராவத் இதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து வந்து ராணி மல்லிகா ஷெராவத்தை  கொன்றுவிடுகிறது. ராணி  மல்லிகா ஷெராவத்தின்  மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூற  இதனையடுத்து  அரசர் பாம்புகள் இல்லாத தேசமான நியூசிலாந்துக்கு தன் மகளை அழைத்து சென்று விடுகிறார்   அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது.

இந்நிலையில் அரண்மனை வாசலில் சிலர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் இதனை விசாரிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியான  ஜீவன் வருகிறார்,  இறுதியில்  ஜீவன் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? எனபதே ’பாம்பாட்டம்’  படத்தின் கதை.
 நாயகனாக நடித்திருக்கும் ஜீவன் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்  போலிஸ் அதிகாரியாக  அப்பா கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருக்கிறார். வில் வித்தை பயிற்சி அளிப்பவராக மகன் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவன் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். வில்லனாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குனர் வடிவுடையான்

ராணி மங்கம்மா தேவி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் குறைவான காட்சிகள் வந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் , ரமேஷ் கண்ணா  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி  இசை சத்தம் கொஞ்சம்  அதிகம் உள்ளது.  இனியன் J ஹாரீஸ் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார்கள்.
அரண்மையில் நடக்கும் சமப்வங்களை மையப்படுத்தி பெரிய  நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான படத்தை  உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வடிவுடையான் முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி நிறைய திருப்பங்களுடன்  இருக்கிறது.


நடிகர்கள் :  ஜீவன்  (மாணிக்க வேல் )- அப்பா ) மகன் ஜீவன் ( சரவணன் ),மல்லிகா ஷெராவத் ( மங்கம்மா தேவி ),ரித்திகா சென் ( ராதிகா ),  சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான (காளி) சுமன்,

இசை  : அம்ரிஷ்

இயக்கம் : வடிவுடையான்

மக்கள் தொடர்பு : மணவை புவன்,

Comments

Popular posts from this blog