’நினைவெல்லாம் நீயடா’ -  விமர்சனம்
சென்னையில் இசைக் கருவிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்  நாயகன் பிரஜின்  பள்ளிப் பருவ  காதலியை  நினைத்துக் கொண்டே வாழ்ந்து வரும்  நாயகன் பிரஜின்,தன்னை பிரிந்து சென்ற காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
முறைப்பெண்ணான மனிஷா யாதவ்  பிரஜினிடம் என்னை  திருமணம்  செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார். அதற்கு பிரஜின் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனவே உன்னை திருமண செய்து கொள்ள முடியாது  என்று கூறுகிறார். இதனால் மனம் உடையும் மனிஷா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்..
ஒரு கட்டத்தில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்த வேறு  வழி இல்லாததால் தனது முறைப்பெண்ணான மனிஷா யாதவை  பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார் . ஆனாலும் காதலின் நினைவாகவே இருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுகிறது.
ஒரு கட்டத்தில் பிரஜனின் காதலி வெளிநாட்டில் இருந்து பிர்ஜினை  தேடி சென்னைக்கு  வருகிறார். அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது பிரஜினுக்கு  தெரிய வருகிறது.  இறுதியில் பிராஜின் மனைவியா? காதலியா? யாருடன் ஒன்று சேர்ந்தார் என்பதே  ’நினைவெல்லாம் நீயடா’  படத்தின் கதை.
கதாநாயகனாக பிரஜன் தன் கதாபாத்திரத்தை  உணர்ந்து நடித்திருக்கிறார் காதலியுடன் வாழ முடியாமல் மனைவியுடன் வாழ பிடிக்காமல் படும் வேதனைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்  கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் படத்தில் காட்சிகள் குறைவாக யிருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். பிராஜின் மனைவியாக வரும்  வரும் மனிஷா யாதவ் குறை இல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.

பள்ளி பருவத்தில் நடித்திருக்கும் ரோஹித் மற்றும் யுவலக்‌ஷ்மி இருவரும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகள் தான் காதல் படம் என்ற உணர்வை நமக்கு கொடுக்கிறது  பிரஜினின் நண்பராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்‌ஷத்ரா ஆகியோர்  கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி காதல் படத்திற்கு ஏற்றவாறு கலர்புல்லாக இருக்கிறது.
சிலந்தி & அருவா சண்டை படங்களை இயக்கிய ஆதிராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்..முதல் காதல் எப்போதும் நம் நினைவில் இருந்து அகலாது, என்பதை உணர்த்தும் வகையில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதி ராஜன் படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதால் ரசிக்க முடிகிறது.

நடிகர்கள் : பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லீ, மதுமிதா, மனோபாலா

இசை : இளையராஜா

இயக்கம் : ஆதி ராஜன்

மக்கள் தொடர்ப்பு  : ஜான்

Comments

Popular posts from this blog