சைரன்’ - விமர்சனம்
கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும்  நாயகன் ஜெயம் ரவி.  இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார்.  ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு இருக்கிறார்.

ஜெயம்ரவி  வெளியே வந்ததை நினைத்து அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட பள்ளிக்கூடம் செல்லும் அவருடைய மகள் தனது அப்பா கொலைகாரன் என தவறாக நினைத்துக்கொண்டு அவருடைய முகத்தை கூட பார்க்க  மறுக்கிறது. இதனால் ஜெயம் ரவி மனவேதனையும் அடைகிறார்.

ஜெயம் ரவி பரோலில் வெளிய வந்த சமயத்தில் தான் அந்த பகுதியில் 2 கொலைகள் நடக்கின்றன..  அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று காவல் அதிகாரியான கீர்த்திசுரேஷ் சந்தேகப்படுகிறார். நான் செய்யவில்லை என்கிறார் ஜெயம்ரவி. இறுதியில் கீர்த்தி சுரேஷ் உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ’சைரன்’  படத்தின் கதை..
108 ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருக்கும் ஜெயம்ரவி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான  தேர்வாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயம் ரவி, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார். ஆக்ஷன், எமோஷனல்,சென்டிமென்ட என  அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ்  காக்கி உடையில் இருந்தாலும் முக பாவங்களை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள். அதை சரியாகப் பயன்படுத்திக் இருக்கிறார். இவருடைய பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்ட இருக்கிறார்.
ஜெயம்ரவியின் மனைவியாக வரும் அனுபமாபரமேஸ்வரனுக்கு வித்தியாசமான வேடம்.அதனால் குறைவான நேரமே வந்தாலும் அதை சரியாக செய்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு நிழல் காவலராக வரும் யோகி பாபு, படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், அஜய், ஜெயம் ரவியி ன் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நட்சத்திரங்களும் திரைக்கதைக்கு ஏற்ற சரியான  தேர்வாக இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது  சாம் சி எஸ்’ன் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. ஒளிப்பதிவாளர் செல்வகுமார். எஸ்.கே காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்
மனைவியை கொன்றவர்களை  பழிவாங்கும் கதை தமிழ் சினிமாவில்  எவ்வளவோ  வந்திருக்கின்றன  ஆனால் அதில் இருந்து விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தி  சென்றிருக்கிறார்  இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், மாற்று ஜாதி காதலை மிக நுணுக்கமாக பயன்படுத்தி, அதை வைத்து நடக்கும் அரசியலையும், அப்பா – மகள் பாசத்தையும் மிக தெளிவான நோக்கோடு கையாண்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்


நடிகர்கள் : ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

இயக்கம் : அந்தோணி பாக்யராஜ்

மக்கள் தொடர்பு : சதிஷ் - சிவா (AIM  )

Comments

Popular posts from this blog