தூக்குதுரை’ -  விமர்சனம்

கைலாசம் என்ற கிராமத்தில் ஊர் தலைவர் மாரிமுத்து இவரது மகள் இனியா ஊர்த் திருவிழாவிற்காக திரைப்படம் போட வரும் யோகிபாவு மீது காதல் வருகிறது.  ஒரு நாள் யோகி பாபுவும் - இனியாவும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடி போய்  விடுகிறார்கள்..

மறுபுறம் சென்னையில் மொட்டை ராஜேந்திரனிடம் மகேஷ் சுப்பிரமணியன், பால சரவணன், சென்ராயன் திருட்டு தொழிலை  கற்றுக்  வருகிறார்கள்.. பல லட்சம் மதிப்பிலான அம்மன் கிரீடம் ஒன்று கைலாசம்  கிராமத்தில் இருப்பதாக செய்தித்தாள்  மூலம் அறியும் மூவரும்  அதை திருட கைலாசம்  கிராமத்திற்கு செல்கிறார்கள்.

இறுதியில் அந்த கிரீடம் இவர்களுக்கு கிடைத்ததா ? இல்லையா? ஊரை விட்டு  ஒடி போன  யோகிபாபுவிற்கு என்ன ? நடந்தது எனபதே ’தூக்குதுரை’  படத்தின் மீதிக்கதை..

யோகி பாபு வழக்கமான தனது அதிரடி  வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.  பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி  ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். நாயகி இனியா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்தில் மற்ற
வேடங்ககளில் நடித்தவர்கள் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜின் இசையும் கதைக்கு ஏற்ப  இருக்கிறது  ரவிவர்மாவின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக  இருந்த்திருக்கும்


நடிகர்கள்: யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்றாயன், மாரிமுத்து

இசை: கே எஸ் மனோஜ்

இயக்கம்: டெனீஸ் மஞ்சுநாத்

மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா & நாசர்

Comments

Popular posts from this blog